ETV Bharat / state

பணமோசடி வழக்கு: முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரருக்கு வழங்கிய ஜாமீன் ரத்து! - Money Fraud Case

Madras HC:அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அதிமுக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 10:11 PM IST

சென்னை: தமிழக அரசில், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக, மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி மீது சென்னையைச் சேர்ந்த முகமது மொஹிதின் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய நல்ல தம்பி, ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின் போது, முதலில் 1 லட்சம் ரூபாய் தருவதாகவும், இரண்டு மாதங்களில் மொத்த பணத்தையும் மொஹிதினிடம் திரும்ப அளிப்பதாக விஜய நல்லதம்பி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், உறுதி அளித்தபடி பணத்தைத் திரும்ப வழங்கவில்லை என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென மொஹிதின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி T.V. தமிழ் செல்வி, பணத்தைத் திருப்பித் தருவதாக உத்தரவாதத்தைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, விஜய நல்லதம்பிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஒன்றரை கோடி கொள்ளை என நாடகம்.. கோவையில் சிக்கிய பாஜக பிரமுகர்.. காவல்துறை அளித்த பகீர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.