தேனி: தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் உப்பார்பட்டி கிராமத்தில் உள்ள சுந்தர்ராஜ பெருமாள் கோயிலிலும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இரவு சொக்கப்பர் கொளுத்தி கொண்டு சாமி வீதி உலா செல்லும் சாலைகளில் கொண்டு செல்லப்பட்டனர்.
அதன் பின்பு கள்ளழகர் வேடம் அணிந்து குதிரை வாகனத்தில் உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் மூலஸ்தானம் கோயிலில் இருந்து சுவாமி கள்ளழகர் குதிரை வாகனத்தில், பச்சை பட்டு உடுத்தி, குதிரை வாகனத்தில் 6.30 மணி அளவில் முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல் உப்பார்பட்டி கிராமத்தை சேர்ந்த கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி முல்லைப் பெரியாற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உப்புக்கோட்டை முல்லை பெரியாற்றம் கரையில் இரு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் "கோவிந்தா கோவிந்தா" என கோஷமிட்டு எதிர்சேவை நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
அதன் பின்பு முல்லைப் பெரியார் ஆற்றங்கரையில் போடப்பட்டுள்ள பந்தலில் இரண்டு கிராமத்தைச் சேர்ந்த கள்ளழகர் சுவாமியும் வைக்கப்பட்டுள்ளது. உப்புக்கோட்டை மற்றும் உப்பார்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைத்து பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவில் வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. தேனி எல்லையில் தீவிர கண்காணிப்பு! - Bird Flu Camp In Tamil Nadu