ETV Bharat / state

தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வினாடி - வினா போட்டி... தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 10:47 PM IST

Lok Sabha Election 2024 awareness quiz competition: நாடாளுமன்றத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வினாடி - வினா போட்டியானது சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஆன்லைன் மூலம் நடைபெறும் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகத் தேர்தல் நடைமுறையில் குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்பினை அதிகப்படுத்தும் விதமாக வினாடி வினா நிகழ்ச்சியானது 14.04.2024 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டடத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு அணியிலும் இரண்டு முதல் மூன்று நபர்கள் (குறைந்தது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருநபர்கள்) பங்கேற்கலாம். முதல்நிலைப் போட்டியானது இணைய வழியில் நடைபெறவுள்ளதால் பங்கேற்பாளர்கள் அனைவரும் கைப்பேசி மூலமே பங்கேற்க இயலும்.

இப்போட்டியானது காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் ஆர்வமுடையோர் தங்களது பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இப்போட்டியில் பங்கேற்க இணையவழி மூலம் பதிவு செய்வது மிகவும் அவசியம். நேரடியாகப் பதிவு செய்வதற்கு அனுமதி இல்லை. தேர்தல் / தேர்தல் நடைமுறை மற்றும் பொது அறிவு (முறையே 50%) சார்ந்து வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.

போட்டி குறித்த விவரம் பின் வருமாறு:-

போட்டி நடைபெறும் இடம்: அம்மா மாளிகை, ரிப்பன் கட்டடம், சென்னை மாநகராட்சி, சென்னை.

நாள் மற்றும் நேரம்: 14.04.2024 - காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை

நுழைவு கட்டணம் : அனுமதி இலவசம்

வருகைப் பதிவு நேரம் : காலை 9.30 மணி

பரிசுத் தொகை :

முதல் பரிசு - ரூ.20,000/-

இரண்டாம் பரிசு - ரூ.10,000/-

மூன்றாம் பரிசு - ரூ.5,000/- இப்போட்டி குறித்து எழும் ஐயங்களுக்கு 9840927442 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ''யார் பிரதமராக வந்தாலும் மக்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்'' - கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை.ஜி.ராமச்சந்திரன் பேச்சு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.