நொடிக்கு நொடி மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளை அறிய: https://www.etvbharat.com/ta/!elections/lok-sabha-election-results-2024
சென்னை: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
முன்னதாக, அதிகளவிலான தபால் வாக்குகள் இருக்கும் இடங்களில் தேவைப்பட்டால் தனி அறையில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், வாக்குகளுடைய முடிவுகள் அங்குள்ள தகவல் பலகையில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மேலும், தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய அரை மணி நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் என்றும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் செய்தியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அந்தச் சுற்றுக்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் தபால் வாக்கு முடிவுகள் எப்போது தெரியவரும்? - சத்யபிரதா சாகு கூறுவது என்ன? - Lok Sabha Election Result 2024