ஐதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று (ஜூன் 27) ரிலீசானது. உலகம் முழுவதும் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மறைந்த ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவின் நினைவு போற்றும் வகையில் படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சினிமா, ஊடகம், சிட்பண்ட் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வந்த ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் தனது 87 வயதில் கடந்த 8-ஆம் தேதி காலமானார். முன்னதாக சினிமா மற்றும் ஊடகத் துறையில் அவர் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம் விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில், அவரது நினைவு போற்றும் விதமாக கல்கி படத்தில் அவருக்கு நினைவுஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த தெலுங்கு நடிகரும், பிரபாஸின் உறவினருமான கிருஷ்ணம் ராஜூக்கும் இந்தப் படத்தில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையில் தோன்றிய இரு பெரும் ஜாம்பவான்களின் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரசிகர் ஒருவர், "ஜாம்பவான்கள் என்றென்றும் வாழ்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
ST #Kalki2898AD #KALKI #kalki2898ad Excellent Movie @nagashwin7 Nuvu tope anna 🙏🏻 #Prabhas Anna love you as always… Next level… @SrBachchan sir 🫡🫡 @deepikapadukone Superb acting 👊 #BlockbusterKalki Must watch in Big screens 🙌 pic.twitter.com/JNYZzXBSZN
— PK REDDY (@REDDY_PK_SEA) June 26, 2024
தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் இன்று (ஜூன் 27) திரையரங்குகளில் ரிலீசான நிலையில், படத்தின் மீது நல்ல விமர்சனங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் கமல்ஹாசன் மிரட்டியுள்ளார்.
அது தவிர பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்திய அளவில் தொடக்க நாளில் 200 கோடி ரூபாயும், தென் ஆமெரிக்காவில் தொடக்க நாளில் 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வசூல் சாதனை படைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "4 வருட உழைப்பு; ஸ்பாய்லர்களை வெளியிடாதீர்கள்" - கல்கி படக்குழு வைத்த வேண்டுகோள்! - Kalki 2898 AD