ETV Bharat / state

நாளை ஆற்காடு சுரேஷின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி.. பெரம்பூரில் குவியும் காவல்துறை! - arkadu suresh 1st memorial tribute - ARKADU SURESH 1ST MEMORIAL TRIBUTE

Arkadu Suresh: ஆற்காடு சுரேஷின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நாளை அனுசரிக்கப்படுகிவதை ஒட்டி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங், ஆற்காடு சுரேஷ்
ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆற்காடு சுரேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 17, 2024, 3:37 PM IST

சென்னை: புளியந்தோப்பைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, பட்டினம்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அரக்கோணத்தைச் சேர்ந்த ரவுடி ஒன்றரை கண் ஜெயபால், திருநெல்வேலி மாவட்ட கூலிப்படையைச் சேர்ந்த நபர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் தான் நிதி உதவி செய்தார் என ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் கருதினர்.

இந்நிலையில் தான், கடந்த ஜூலை 5ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் அன்று சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்டாலும், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட பத்து பேர் ஆற்காடு சுரேஷின் உறவினர்கள் தான் என போலீசார் தெரிவித்தனர்.

ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழியாகவே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலுவுடன் கைதானவர்கள் (முதலில் கைதான எட்டு பேர்) போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு, எதிரிக்கு எதிரி நண்பன் என பல கும்பல்கள் ஒன்று சேர்ந்து இந்த கொலையைச் செய்தது தெரியவந்துள்ளது.

நாளை ஆற்காடு சுரேஷின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் தரப்பு - ஆம்ஸ்ட்ராங் தரப்பு புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகளில் அதிக அளவில் வசிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு மறுக்கும் ரவுடி நாகேந்திரன்? அடுத்தகட்ட மூவ் என்ன? - Armstrong Murder Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.