ETV Bharat / state

"நடிகர் விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வர மாட்டேன்" - KPY பாலா திட்டவட்டம்! - kpy bala not join politics - KPY BALA NOT JOIN POLITICS

KPY BALA: தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்தாலும், எனக்கு போதிய அறிவு இல்லாத காரணத்தினால் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என சின்னத்திரை பிரபல பாலா தெரிவித்தார்.

KPY பாலா புகைப்படம்
KPY பாலா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 10:33 PM IST

சென்னை: சென்னை அடுத்த பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று அடுக்குமாடி நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த சின்னத்திரை பிரபலம் KPY பாலா, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அப்போது பெண் முதியவர் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு உதவி செய்யுமாறு பாலாவிடம் கேட்டு மனு அளித்தார்.

KPY பாலா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த மனுவினை பெற்றுக் கொண்ட பாலா அதற்கு தீர்வு காணும் வகையில், தொலைப்பேசியில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்து பேசினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த பாலா, மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்விக்கு, நான் உழைப்பதில் வரும் வருமானத்தில் தான் மக்களுக்கு உதவிகள் செய்கின்றேன். என்னிடம் உதவி கேட்டு மக்கள் நிறைய பேர் வருகிறார்கள்.

ஆதலால் நான் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வேலை பார்க்கிறேன். நான் யார்கிட்டேயும் பணம் வாங்கி மக்களுக்கு உதவி பண்ணறது இல்லை. திருமணத்திற்கு பின்பும் இந்த உதவிகள் தொடரும். அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, எனக்கு போதிய அரசியல் அறிவு இல்லாத காரணத்தினால் நான் அரசியலில் இறங்க மாட்டேன்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் உங்களை அரசியலுக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் நான் அரசியலில் இறங்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். குவைத் தீ விபத்து குறித்த கேள்விக்கு, குவைத் தீ விபத்து குறித்து கேள்வி பட்டேன். எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: போதைப்பொருளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க தமிழக முதலமைச்சர் முன்வருவாரா? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி! - drug issue in tamil nadu

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.