ETV Bharat / state

சென்னையில் நடைபெற்ற மழலையர் சைக்கிள் பேரணி! - ambattur - AMBATTUR

சென்னை அம்பத்தூரில் மான் உட்சவ் மற்றும் ஜிரோ ஈஸ் குட் என்பதை வலியுறுத்தி மழலையர்களின் சைக்கிளத்தான் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

சைக்கிள் பேரணி
சைக்கிள் பேரணி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 4:22 PM IST

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் 8 வரை டான் உத்சவ் என்ற (DaanUtsav) தனியார் தொண்டு நிறுவனம் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மழலையர்கள் பள்ளியுடன் இணைந்து மான் உத்சவ் மற்றும் ஜீரோ இஸ் குட் என்பதை வலியுறுத்தி சைக்கிளத்தான், வாக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே தனியார் பள்ளி உரிமையாளர் கமலஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரந்தாமன், ஃப்ளமிங்கோ ஹெல்த் கேர் மருத்துவமனை இயக்குனர் பிரனு சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடி அசைத்து நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.

சைக்கிள் பேரணி (Credits - ETV Bharat Tamil Nadu)

அனைவரிடமும் மகிழ்ச்சியைப் பகிர்வது, இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவது, விபத்து இல்லா சாலை உருவாக்குவது என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த சைக்கிளத்தான், வாக்கதான் ராக்கி திரையரங்கம் தொடங்கி, பிரதான சாலையில் சுமார் 1.5 கிமீ தூரம் வரை நடைபெற்றது. இதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்று மழலையர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியது வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: வித்தியாசமான செல்லப்பிராணிகளை வளர்க்க ஆசையா? ஹாபியை பிஸ்னஸாக மாற்றிய தஞ்சை இளைஞர்!

இதனைத் தொடர்ந்து, இதில் பங்கேற்ற மழலையர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக பங்கேற்ற மழலையர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தனியார்ப் பள்ளி உரிமையாளர் கமலஹாசன் கூறுகையில், “காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இல்லாதாவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் என்பதுதான் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். இதில் எங்களுடைய பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் பங்கேற்க வேண்டும் என நினைத்தோம். இதனை ஒவ்வொரு ஆண்டும் எங்களது பள்ளியில் நடத்துவோம்.

அப்போது பெற்றோர் பலர், குழந்தைகளுக்குத் தேவையான துணிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுப்பார்கள். அதனை ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு கொடுத்துவிடுவோம். போக்குவரத்து போலீசாருடன் இணைந்து இந்த நிகழ்வை நடத்தினோம். அப்போது (ஜீரோ இஸ் குட்) விபத்தில்லா சாலை உருவாக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.