ETV Bharat / state

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் கிறிஸ்தவ மக்கள் இயக்கம் பிரதமருக்கு மனு! - MR Vijayabaskar Case - MR VIJAYABASKAR CASE

Petition to PM For M R Vijayabaskar Arrest: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சிபிசிஐடி தொடந்துள்ள வழக்கு குறித்து பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தலைமை தபால் அலுவலகத்தில் கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அகஸ்டின்
அகஸ்டின் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 5:26 PM IST

கரூர்: கிறிஸ்தவ மக்கள் இயக்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான அகஸ்டின், இன்று கரூர் கடை வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு ஒன்றை பதிவு தபால் வழியாக அனுப்பி வைத்தார்.

கிறிஸ்த்தவ மக்கள் இயக்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான அகஸ்டின் (Credits- ETV Bharat Tamil Nadu)

அந்த மனுவில் அவர் குறிப்பிடுவதாவது, “கரூர் மாவட்டத்தில் மக்களின் நல்ல மதிப்பை பெற்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் மீது உரிமையியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கினை ரத்து செய்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைக்கிறோம்” என எழுதப்பட்டிருந்தது.

பின் இதுகுறித்து பேசிய வழக்கறிஞர் அகஸ்டின், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தனது முயற்சியால் கொண்டு வந்தவர். அவற்றுள் கரூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட கரூர் மாவட்டம் முழுவதும் இயற்கை சுற்றுச்சூழல் காக்கும் வகையில் ‘கானகத்தில் கரூர்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து வருகிறார்.

மேலும், அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, தீபாவளி தினத்தன்றும் தன் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடாமல், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தவர்.

இப்படிபட்ட இவர் மீது அரசியல் காரணங்களுக்காக சிவில் வழக்கு கூட இல்லாத ஒருவர் மீது, ஆயிரம் கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு வைத்து, முக்கிய குற்றவாளியாக சிபிசிஐடி கைது செய்யுள்ளது. எனவே, தமிழகத்தில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்களை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.

எனவே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போடப்பட்டுள்ள வழக்கையும், அவர் மீதான கைது நடவடிக்கை மீதும் பிரதமர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ் நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: 2 நாள் கஸ்டடியில் எம்.ஆர். விஜயபாஸ்கர்... சிபிசிஐடி தீவிர விசாரணை..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.