ETV Bharat / state

"ஆசை, பேராசை, கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" - மோடிக்கு கார்த்தி சிதம்பரம் பதிலடி! - Karti Chidambaram - KARTI CHIDAMBARAM

MP Karti Chidambaram: தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணை எட்டாது என பிரதமர் மோடி கூறியதற்கு, ‘ஆசை, பேராசை, கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று கார்த்தி சிதம்பரம் பதிலளித்துள்ளார்.

MP Karti Chidambaram
எம்பி கார்த்தி சிதம்பரம் புகைப்படம் (credits - ETV Bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:24 PM IST

எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: எதிர்கட்சிகளை முடக்குவதற்காக, பாஜகவுக்கு எதிராக செயல்படும் அரசியல் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து, அவர்களை செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இன்று (செவ்வாய்க்கிழமை) பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “என்ஐஏ என்பது பயங்கரவாதத்துக்கு (Terrorism) எதிராக நடக்கும் செயல்களை தடுப்பதற்காகவும், அதனால் வரும் விளைவுகளை விசாரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட பிரிவு.

ஆனால், தற்போது அதை வைத்து அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், முதலமைச்சர் மீது விசாரணைக்கு, துணைநிலை ஆளுநர் பரிந்துரை செய்கிறார் என்றால், அரசியலுக்காக பழிவாங்குவது என்பது தான் அர்த்தம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டியேத் தீருவோம் என்பது கர்நாடகா அரசின் முடிவு. தமிழ்நாட்டில், தமிழக அரசு என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும். தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க காங்கிரஸ் உறுதுணையாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணை எட்டாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “வருகின்ற ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவு தெரியும். ஆசை, பேராசை, கற்பனைக்கு எல்லாம் இப்போதைக்கு பதில் சொல்ல முடியாது” என்றார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவரது மரணம் குறித்து இது தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், மலைப்பகுதிகளில் யானைகள் வழித்தடம் என தமிழ்நாடு அரசு பரிந்துரைத்திருப்பது குறித்த கேள்விக்கு, யானைகளின் பாதுகாப்பிற்காக அவற்றை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருந்தால் அதை வரவேற்கிறேன். அதேபோல, விவசாயிகள் கோரிக்கை என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டதில் காவி வண்ணம் இருப்பது குறித்த கேள்விக்கு, இந்திய கிரிக்கெட் அணிக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் சம்பந்தமில்லை என்றாலும், அதை இயக்குவது எந்த கட்சி என்று அனைவருக்கும் தெரியும். இந்திய அணியின் ஜெர்சி நீல வண்ணம். அதை மாற்றியது தேவையற்றது. விளையாட்டில் அரசியலை கொண்டு வருவது தேவையற்றது எனக் கூறினார்.

இதையும் படிங்க: நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்; உடற்கூறாய்வு முடிவில் வெளிவந்த பகீர் தகவல்! - TIRUNELVELI JAYAKUMAR DEATH Case

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.