தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்கள் காத்திருந்ததை அறிந்த கனிமொழி அடுத்ததாக தூத்துக்குடி மாவட்ட குடிநீர் பிரச்னை குறித்த கூட்டத்தில் அதிகாரிகளுடன் பங்கேற்றார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக செய்தியாளர்களை தவிர்க்கும் வகையில் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர், அவரது வருகைக்காக செய்தியாளர்கள் சுமார் 3 மணி நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்த பின்னர் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்தார். அடுத்ததாகக் கூட்டம் இருக்கிறது அதற்குச் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டு பதில் அளிக்காமல் சென்று விட்டார்.
தொடர்ந்து அவரது கார் அருகே சென்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கார் கண்ணாடியை மூடிய கனிமொழி எம்பி அங்கிருந்து வேகமாக சென்றார். தூத்துக்குடியில் கனிமொழி எம்பி செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து பேச தயங்கியே கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்ததாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்
இதையும் படிங்க: கோவையில் துவங்கிய 'டெக்ஸ்ஃபேர் 2024' கண்காட்சி.. எம்.பி., கணபதி ராஜ்குமார் கூறியது என்ன? - COIMBATORE SIMA Texfair