ETV Bharat / state

"ஏப்.19ஆம் தேதி சரியான முடிவு எடுத்தால்.. ஜூன் 4ல் நமக்கு விடுதலை" - கமல்ஹாசன்! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Kamal Haasan Election Campaign: பாஜக மாடல் vs திராவிட மாடல் அப்படித்தானே மல்யுத்தம் செய்து விளையாடப் பார்க்கிறீர்கள். இது விளையாட்டு அல்ல என பிரச்சார கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

Kamal Hassan Election Campign
Kamal Hassan Election Campign
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 9:07 PM IST

கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, சூலூர் பகுதியில் கோயம்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "உயிரே, உறவே, தமிழே வணக்கம். கணபதி ராஜ்குமார் கவுன்சிலர் ஆகவும், மேயராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். 2024ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையைத் துவங்கும் பொழுது இந்தியா வாழ்க தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க என்ற கோஷத்துடன் தான் புறப்பட்டேன். மன நிறைவுடன் இங்கு நிற்கிறேன்.

கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்னால், என் தந்தை எந்த காரணத்திற்காகக் காந்தியின் பின்னாலும், காமராஜர் பின்னாலும் சென்றாரோ அதே காரணங்களுக்காக நானும் புறப்பட்டிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. உங்கள் மூதாதையரை நினைவு கொள்ளும் நேரம் இது.

சிறைப்பட்டு, செக்கிழுத்து, வாழ்விழந்து மீட்டுத் தந்த சுதந்திரம். வெள்ளையரை வெளியேற்றிய அந்த தியாகம். இன்று இந்த கொள்ளையர்கள் கையில் நாட்டை கொடுக்கவா? வாய்ஜாம் பேசுபவர்கள் பேச்சில் மயங்கி விடாதீர்கள் பேச்சு, செயல் ஆகாது.

பாஜக அரசு மீது என்ன கோபம் என்று என்னைக் கேட்கிறார்கள். எனக்கு யார் மீதும் கோபம் கிடையாது. நாம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு வழி செய்கின்ற அனைவருக்கும் வணக்கம் சொல்வோம், வந்தனம் சொல்வோம்.

அதற்கு மாறாகச் செய்பவர்கள் நமக்கு விரோதிகள் கூட அல்ல வேண்டாதவர்கள். ஜனநாயகம் என்பது என்ன என்று யோசித்துப் பாருங்கள். அனைவருக்கும் சமமான வாய்ப்பு. அவரவர் உரிமை அவரவர்க்கு. அவரவர் மதம், கடவுள், உணவு, உடை என்று அனைவருக்கும் சமமான நீதி வழங்குவது தான்.

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது. 97 கோடி பேர் வாக்களிக்கப் போகிறார்கள். இது இரண்டாவது சுதந்திரப் போர் என்று கூறினால் மிகையாகாது. ஏப்.19ஆம் தேதி நீங்கள் சரியான முடிவு எடுத்தால், நமக்கு ஜூன் 4 ஆம் தேதி சுதந்திர நாள் என்பதை மறந்து விடாதீர்கள்.

பத்து வருடத்திற்கு முன்பு இருந்த சூலூர் இது அல்ல. தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்பொழுது இங்கு வந்து விமான நிலையம் கொண்டு வருகிறேன், ரயில் விடுகிறேன் என்றெல்லாம் ரீல் விடுவது தேர்தலுக்கு தானே. 10 வருடம் இருக்கும் பொழுது இதைச் செய்திருக்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், 70 வருடம் நாடு முன்னேறி இருக்கிறது என்று கூறுகிறார்கள். தமிழ்நாட்டை எடுத்தால் பாரபட்சம் பாராமல் படிப்படியாகப் பல தலைவர்கள் நம்மை முன்னுக்குக் கொண்டு சென்ற திராவிட மாடல் இது. திராவிடர்கள் இயற்றிய மாடல் இது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் இதற்கு நிகராக இந்தியாவில் எங்குத் தேடிப் பார்த்தாலும் கிடைப்பது கடினம்.

பாஜக மாடல் vs திராவிட மாடல் அப்படித்தானே மல்யுத்தம் செய்து விளையாடப் பார்க்கிறீர்கள். இது விளையாட்டல்ல. உங்கள் வாழ்க்கையுடன் விளையாடி விடுவார்கள். 21 பணக்காரர்கள் 70 கோடி மக்களின் சொத்தை குவித்திருக்கும் மாடல் பாஜக மாடல். ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கும் இந்த மாடல் தான் நல்ல மாடல் இந்தியா பின்பற்ற வேண்டிய மாடல் இதுதான்.

எல்லோருக்கும் ஒரு சாதனை பட்டியல் உண்டு. ஆனால் யார் பயன் பெற்றார்கள் என்பது தான் முக்கியம். உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரனாக்குவது சாதனை அல்ல. கடைநிலை ஏழையைக் கரையேற்றுவதுதான் சாதனை. பல முதலாளிகளைத் தொழிலாளிகள் ஆக்கியது பாஜக அரசு.

அமெரிக்கா, ஜப்பான் மீது இரண்டு அணுக்குண்டுகளைப் போட்டார்கள். அதேபோல் இங்கும் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்ற இரண்டை போட்டார்கள். அதில், நல்ல முதலாளியாக இருந்தவர்கள் எல்லாம் தொழிலாளியாகத் தொழிலுக்கு வந்து விட்டார்கள்.

ஏதோ நகைக்கடையில் செய்த செங்கோலைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பது செங்கோல் அல்ல. உங்கள் ஒவ்வொருவர் கையிலும், இருக்கின்ற இந்த விரல் தான் செங்கோல். நீங்கள் வைக்கும் புள்ளிதான் பெரிய புள்ளி யார்? சின்ன புள்ளி யார்? என்பதை முடிவு செய்யும்.

மேலும் இது உங்கள் வாழ்க்கைக்கான போர். ஜூன் நான்காம் தேதி விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் இன்று அதற்குச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். என்னை இந்தப் பக்கம் திரும்பு, அந்தப்பக்கம் திரும்பு என்று கூறுகிறீர்கள் நீங்கள் நல்வழியில் திரும்புங்கள், தமிழகமே உங்களை நோக்கித் திரும்பும், நாடே உங்களை நோக்கித் திரும்பும் திராவிட மாடலை நோக்கித் திரும்பும் அப்படித் திரும்பினால் நாளை நமதே எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள்… டிடிவி தினகரன் - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.