ETV Bharat / state

கள்ளச்சாராய விவகாரம்: கருணாபுரத்தில் அடங்காத மரண ஓலம்; கள்ளக்குறிச்சி மக்களின் தற்போதைய மனநிலை என்ன? - Kallakurichi Current Situation

Kallakurichi People Current Situation: கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த மரணங்களுக்கு போலீசார் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணாபுரத்தில் நிலவும்  இறுக்கமான சூழல்
கருணாபுரத்தில் நிலவும் இறுக்கமான சூழல் (Image Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 3:09 PM IST

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பகுதியில், கள்ளச்சாராயம் அருந்தி 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்கள், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம், விழுப்புரம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மருத்துவமனை பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தற்போது, அரசியல் தலைவர்கள் பலரும் இங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

கருணாபுர சோக சம்பவத்தின் பின்னணி: கருணாபுரம் என்பது கள்ளக்குறிச்சியின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். பேருந்து நிலையம், நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், காவல் நிலையம் என அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் பின்புறம் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் இந்த கோர சம்பவத்தின் முக்கிய பின்னணியாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் சிறுசிறு வீடுகள் அமைந்துள்ள இந்த பகுதியில், நேற்று முன்தினம் ஒரு துக்க நிகழ்வில், சாராய விநியோகம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அது கள்ளச்சாராயம் என்று தெரியாமல் குடித்ததன் விளைவு தான் தற்போது பலர் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மோசமான இந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மட்டும் 27 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஒரே வார்டில் 10 பேர் மரணம்: குறிப்பாக கள்ளக்குறிச்சி நகராட்சியின் 9-வது வார்டில் மட்டும் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருணாபுரம் கிராமத்தில் மட்டும் பலரை பலியாக்கிய இந்த சம்பவம், அப்பகுதி முழுவதையும் சோகக்கடலில் தள்ளியுள்ளது.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்: கருணாபுரம் பகுதியில், பெயிண்டராக வேலை பார்த்து வந்தவர் மாற்றுத்திறனாளி சுரேஷ். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், இவருக்குத் திருமணமாகி ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் என 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவரது மனைவி வடிவுக்கரசி 3-வது குழந்தை பிறந்தவுடன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனிடையே கள்ளச்சாராயம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சுரேஷ், சாராயத்தை அருந்திவிட்டு மீதியை டம்ளரில் ஊற்றி வைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரு தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வடிவுக்கரசியோ, ஓமத்தண்ணீர் என்று நினைத்து கள்ளச்சாராயத்தைக் குடித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருவருமே உயிரிழந்துள்ளனர். தற்போது அவர்களது 3 குழந்தைகளும் யாரும் இல்லாமல் பரிதாபமான நிலையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மக்களின் மனநிலை: கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மக்கள் கூறும்போது, "இது அரசாங்கம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட விஷயம். இது எல்லாமே காவல்துறைக்குக் கண்டிப்பாக தெரியும். அவர்களில் அலட்சியப்போக்கினால்தான் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் உயிரிழந்த உடனேயே உண்மை நிலவரத்தை தெரிவித்திருந்தால், இத்தகைய மரண பேரிழப்பு நிகழாமல் தடுத்திருக்கலாம்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உளவுத் துறைக்கு நன்றாகத் தெரியும். அவர்களிடம் கேட்டாலே இதற்கு யார் காரணம் என்று சொல்லிவிடுவார்கள். கடந்த 2 வருடங்களாகத்தான் இந்த கள்ளச்சாராய பிரச்சனை உள்ளது. இது காவல் நிலையத்தில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அவர்களுக்குத் தெரியாமல் இங்கு எதுவும் நடக்காது. இந்த சம்பத்திற்கு முழுக்க முழுக்க போலீசார் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். கண்ணு குட்டியும் அவருடைய மனைவி விஜயாவும் கள்ளக்குறிச்சி மக்களிடையே அவ்வளவு செல்வாக்காக இல்லை.

அரசியல் தலைவர்கள் மற்றும் போலீசாருக்கு மாறுதல் கொடுத்து, இந்த தொழிலை பல வருடங்களாக செய்து வருகின்றனர். மேலும், கண்ணுகுட்டியின் மூத்த மகன் ஆனகுட்டி என்கிற கனகராஜ் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை நல வாரியத்தில் முக்கிய பொறுப்பு வகுத்து வருகிறார். அவர் கள்ளச்சாராயம் தொடர்பாக எந்த ஒரு மேல்நடவடிக்கை எடுத்தாலும் அதனைத் தடுத்து வருகின்றார்" என்று பகிரங்க குற்றச்சாட்டை கல்ளக்குறிச்சி மக்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்.. உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத ஹவுஸ் ஓனர் - கருணாபுரத்தில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.