ETV Bharat / state

தெருவுக்கு ஒரு சடலம் : கள்ளச்சாராயத்தால் சீரழிந்த கள்ளக்குறிச்சி! நடந்தது என்ன? - kallakurichi Illegal Liquor Death - KALLAKURICHI ILLEGAL LIQUOR DEATH

kallakurichi illegal liquor Death Issue: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கருணாபுரம் பகுதியில் கூட்டம் கூட்டமாக மக்கள் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர். அங்கு நடந்தது என்ன என்பது குறித்து களத்தலிருந்து நமது செய்தியாளர் அறிவழகன் தரும் தகவல்களைக் காணலாம்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சுரேஷின் உறவினர்
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த சுரேஷின் உறவினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 11:02 AM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில், சிலர் சேலம்,, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ச்சியாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் இன்று காலை 8:30 மணி நிலவரப்படி, 34 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாகவும், மேலும், 30க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கள்ளச்சாராயத்தால் முதன் முதலில் உயிரிழந்தவரின் உறவினர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து முதலில் உயிரிழந்த பிரவீன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரின் உடல்கள் கருணாபுரம் பகுதியில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர் சுரேஷ்குமார் கூறுகையில், "மாவட்ட ஆட்சியர் தெளிவான விளக்கம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால் மேற்கண்ட இருவரும் தங்களுக்கு கண் பார்வை போய்விட்டது. வயிற்றுப்போக்கு, உடல் எரிச்சல் ஆகியவை உள்ளதாக தங்களுடைய உறவினர்களிடம் தெரிவித்து வந்தனர்.

மெத்தனால் கலந்த சாராயம்: இவர்கள் தெரிவித்த பின்னரும் கள்ளச்சாராயத்தால் இந்த உயிர் போகவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது மிகவும் கண்டனத்திற்குரியது. மெத்தனால் கலந்த கலாச்சாரம் குடித்ததால் தான் இவரின் உயிர் போனது என்பது பின்னர் நடைபெற்ற உடற்கூறாய்வு விசாரணையில் தெரியவந்தது.

இது ஒரு காலனிப் பகுதி என்பதால் வாக்குக்காக மட்டுமே அரசியல் கட்சித் தலைவர்கள் இப்பகுதிக்கு வருகின்றனர். இதுவரை ஆறுதல் சொல்ல கூட எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும், அரசு அதிகாரிகளும் வந்து செல்வதில்லை. தொடர்ந்து, இதேபோன்ற கள்ளச்சாராயத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.

முதன் முதலில் சுரேஷ் கள்ளச்சாராயம் அருந்தி கண்பார்வை பறிபோய், வாந்தி, வயிற்று வலி மற்றும் உடல் எரிச்சலால் அவதியுற்று, நேற்றைய தினம் காலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், போதிய சிகிச்சை இல்லாமல் அவர் உயிரிழந்தை அடுத்து அவரை காண வந்தவர்களே தற்போது இறந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, அவரை காண வந்தவுடன் தாங்களும் குடித்து விட்டோமே, தங்களுக்கும் இத்தகைய பிரச்சனை வருமோ என ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி ஓடினர். ஆனால் இவ்வளவு இறப்புகள் ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் ஆகியவற்றை அரசு முழுமையாகத் தடுக்க வேண்டும். குற்றவாளியைக் கைது செய்தாலும் கூட, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 33 ஆக உயர்வு.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.