ETV Bharat / state

வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட ஜாக்டோ ஜியோ..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 9:14 PM IST

JACTTO Geo officially announced protest withdrawal: தமிழக முதலமைச்சரின் சந்திப்பு மற்றும் வாக்குறுதியினைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை (பிப்.15) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில், முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பின்னர் வேலைநிறுத்தத்தைத் தற்காலிகமாக திரும்பப்பெறுவதாக அறிவித்தனர். இது குறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், "ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் 26.02.2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, நேற்றைய தினம் முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, கூ.முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று(பிப்.13) மாலை அமைச்சர் (நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) பத்திரிக்கைச் செய்தி ஒன்றினை வெளியிட்டார். போராட்ட நேரத்தில், அமைச்சரின் பத்திரிக்கைச் செய்தி கடும் அதிருப்தியினை ஏற்படுத்திய நிலையில், ஜாக்டோ ஜியோ அந்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவித்து, தமிழக முதலமைச்சர் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஜாக்டோ ஜியோவின் கோரிக்கையினை ஏற்று, தமிழக முதலமைச்சர் இன்று (பிப்.14) ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, நமது வாழ்வாதார கோரிக்கைகள் தொடர்பாகத் தமிழக முதலமைச்சரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகள் திராவிட முன்னேற்றக் கழக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.

தமிழக முதலமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை இந்த அரசு நடைமுறைப்படுத்தாமல் வேறு அரசால் நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அனைத்துக் கோரிக்கைகளையும் நிதி நிலைமையினைச் சீராக்கி, விரைவில் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தார். இச்சந்திப்பின்போது, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஏ.வ.வேலு, க. முத்துசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்களும் உடனிருந்தனர். தமிழக முதலமைச்சரின் வாக்குறுதியினை ஏற்றும் ஜாக்டோ ஜியோவின் மீது தமிழக முதலமைச்சர் கொண்டுள்ள மாறாத அன்பினையும் கருத்தில் கொண்டு, 15.02.2024 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தினை தற்காலிகமாக ஒத்திவைப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் எல்.முருகன் போட்டி! மீண்டும் எம்.பியாகிறார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.