ETV Bharat / state

தமிழக மாணவர்களின் கனவை சிதைக்கும் மத்திய அரசு - ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் தீர்மானம் - Jacto Geo

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மாணவர்களின் கல்விக் கனவை மத்திய அரசு சிதைப்பதாக ஜாக்டோ-ஜியோ குற்றம்சாட்டியுள்ளது.

ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம்
ஜாக்டோ-ஜியோ ஆலோசனை கூட்டம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 3:49 PM IST

சென்னை: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தாஸ், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வறுமாறு,

  1. 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

2. கடந்த 14.2.2024ல் தமிழ்நாடு முதலமைச்சருடன் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக மீண்டும் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சரை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.

3. பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்திய இறையாண்மைக்கும் அரசியலமைப்பிற்கும் எதிராக பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளுக்கு விடுவிக்க வேண்டிய நிதியினை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2023 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் தூத்துக்குடி - நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பாதிப்பிற்காக ரூ.37,902 கோடி நிதியினைக் கோரியபோது, தற்போது வரை வெறும் ரூ.276 கோடி மட்டுமே வழங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • குறிப்பாக சென்னைப் பெருநகர இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதியினை வழங்காமல் மறுப்பது, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையினை நடைமுறைப்படுத்த சம்மதித்தால் மட்டுமே பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதியினை விடுவிக்க முடியும் என நிபந்தனை விதித்து தமிழக மாணவர்களின் கல்விக் கனவினை சிதைப்பது.
  • தமிழ்நாட்டில் இந்திய ரயில்வேத் துறையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களுக்கான நிதியினை 2024-25 ஆம் ஆண்டில் முழுமையாக வெட்டியிருப்பது. போன்று பல்வேறு நிதிப் பகிர்வுகளை தமிழ்நாட்டிற்கு வழங்காமலும் உரிய நேரத்திற்கு விடுவிக்காமலும் வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசை ஜாக்டோ ஜியோ வன்மையாகக் கண்டித்துள்ளது.
  • கூட்டாட்சி மரபுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு உரிய நிதியினை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என மத்திய அரசை என்று ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.