ETV Bharat / state

முன்பே கணித்த இஸ்ரோ.. நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை.. வயநாடு நிலச்சரிவு உணர்த்துவது என்ன? - ISRO warning wayanad landslide - ISRO WARNING WAYANAD LANDSLIDE

ISRO warning landslide last year: வயநாடு உள்ளிட்ட 147 மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டு கடந்த ஆண்டே இஸ்ரோவின் 'தேசிய தொலைநிலை உணர்தல் மையம்' எச்சரிக்கை விடுத்துள்ளது.

landslide
landslide (Credits - ISRO)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:18 PM IST

சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் நிலச்சரிவு அபாயம் குறித்த இஸ்ரோவின் NRSC (தேசிய தொலைநிலை உணர்தல் மையம்) அமைப்பின் தரவுகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலைநிலை உணர்தல் மையம் (National Remote Sensing Centre), இந்திய செயற்கைக்கோள் தரவுகள் அடிப்படையில் பேரிடர் அபாயம் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிலச்சரிவு அபாயம் குறித்த தகவல்களை வெளியிட்ட NRSC அமைப்பு, இந்தியாவில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 147 மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.

13வது இடத்தில் வயநாடு: குறிப்பாக, கேரள மாநிலத்தின் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதை செயற்கைக்கோள் படத்துடன் விளக்கிய NRSC ஆய்வு மையம், நிலச்சரிவு அபாய பட்டியலில் இந்தியாவில் 13வது இடத்தில் வயநாடு இருப்பதாக பதிவு செய்துள்ளது.

மலைகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு கனமழை, நிலநடுக்கம் போன்ற இயற்கை காரணங்களும், சாலைகள், கட்டுமானம், சுரங்கம் போன்ற மானுடவியல் நடவடிக்கைகளும் முக்கியக் காரணியாக உள்ளது. உலகில் அதிக உயிர்களைப் பழிவாங்கும் இயற்கைப் பேரிடரில் நிலச்சரிவு 3வது இடத்தில் இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் நிலச்சரிவு பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளாக கொலம்பியா, தஜிகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகியவை இருக்கும் நிலையில், இந்தியாவில் பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களிலேயே அதிக நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவில் நிலச்சரிவுகள் 85.3 சதவீதம் இமயமலையிலும் (66.5 சதவீதம் இமயமலையின் வட மேற்குப் பகுதியிலும், வடகிழக்கு இமயமலையில் 18.8 சதவீதம்), மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 14.7 சதவீதமும் ஏற்படும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகத்தில் 690 இடங்கள், கேரளத்தில் 6 ஆயிரத்து 39 இடங்கள், கர்நாடகத்தில் 1,094 இடங்கள் நிலச்சரிவு ஆபத்துமிக்க இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

நிலச்சரிவு அபாயம் மிக்க 147 மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவால் அதிக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கும். மேலும், தமிழகத்தின் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்ட மலைப் பகுதிகளில் உள்ள 690 இடங்கள் நிலச்சரிவு அபாயம் மிக்க இடங்கள் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

அதில், தமிழகத்தின் கோவை மாவட்டம் 36வது இடத்திலும், திண்டுக்கல் மாவட்டம் 41வது இடத்திலும், கன்னியாகுமரி 43வது இடத்திலும், தேனி 59வது இடத்திலும், திருநெல்வேலி 72வது இடத்திலும், நீலகிரி மாவட்டம் 85வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி மாவட்டங்கள் நிலச்சரிவு ஆபத்து சற்று குறைவாக உள்ள அடர் பச்சை குறியீட்டில் வகைப்படுத்தியுள்ளது. தொடர்ந்து, நிலச்சரிவு ஆபத்து சற்று அதிகம் மிக்க பச்சைக் குறியீட்டில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மற்றும் கொங்கன் மலைப்பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பகுதிகள் நிலச்சரிவு அபாயம் மிக்கவை என்றும், தென் மாநிலங்களைவிட வடகிழக்கு மாநிலங்களில் அதிக நிலச்சரிவு ஏற்பட்டாலும் மக்கள் அடர்த்தி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகம் இருப்பதால் உயிரிழப்பு அபாயம் தென்மாநிலங்களுக்கே அதிகம் இருப்பதாக தேசிய தொலைநிலை உணர்தல் மையம் எச்சரித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எல் நினோ Vs லா நினோ.. வயநாடு நிலச்சரிவுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன? - El Nino vs la nina

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.