சென்னை: தென்காசி மாவட்டம், குலசேகரபட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதர் கணேசன் என்ற சுவாமி பவதத்தாவை மீட்டு தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்த நிலையில் மார்ச் 2ஆம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்து கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா? என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மார்ச் 5ஆம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம், ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த ஆலாந்துறை காவல் நிலையம், அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே, காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக்கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: தொப்பையை குறைக்க போராடுகிறீர்களா? அதைவிட மோசமான நிலை என்ன தெரியுமா? உடனே தெரிஞ்சுக்கோங்க!