ETV Bharat / state

4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் வெளிநாட்டு விமான சேவைகள் - சென்னை விமான நிலையம் தகவல்!

International Airline service: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த வெளிநாட்டு விமான சேவைகள் 4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

International Airline service
4 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சென்னைக்கு வெளிநாட்டு விமான சேவைகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 10:49 PM IST

சென்னை: ஹாங்காங் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான சேவை வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்தும், சென்னை மொரிஷியஸ் இடைய ஏர் மொரீஷியஸ் ஏர்லைன்ஸ் விமான சேவை, வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்தும் மீண்டும் இயங்கத் தொடங்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொழில் துறையினர், உயர்கல்வி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியது. அதன்பின்பு கொரோனா வைரஸ் இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று தொடர்ந்து பாதிப்புகள் நீடித்தது. இருப்பினும் சென்னை விமான நிலையத்தில் முடங்கியிருந்த விமான சேவைகள், படிப்படியாக இயங்கத் தொடங்கின.

உள்நாட்டு விமான சேவைகள், சர்வதேச விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கி, தற்போது விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சென்னை விமான நிலையம் நாள் ஒன்றுக்கு 501 விமான சேவைகளை இயக்கி புதிய சாதனை படைத்தது. அந்த சாதனை அதிக நாள் நீடிக்காமல், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அடுத்த சில மாதங்களில் 2020 மார்ச் மாதத்தில் அடியோடு விழுந்தது.

ஆனால் தற்போது விமான சேவைகள் அதிகரித்து வந்தாலும், இதுவரையில் நாளொன்றுக்கு 400 விமான சேவைகள் அளவுக்குத்தான் இயக்கப்பட்டு வருகிறது. அந்த 501 விமான சேவைகளின் சாதனையை பிடிப்பதற்கு, மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, சென்னைக்கு விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தற்போது மீண்டும் விமான சேவைகளை சென்னைக்கு தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

அதன்படி ஹாங்காங் - சென்னை - ஹாங்காங் இடையே இயக்கப்பட்டு வந்த கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்பு சென்னைக்கு மீண்டும் அதன் விமான சேவையை வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து இயக்கவிருக்கிறது. முதல் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் இந்த விமான சேவைகள், பயணிகள் வரவேற்பை பொறுத்தே தினசரி விமான சேவைகளாக இயக்கப்பட இருக்கின்றது.

அதைப்போல் சென்னையில் இருந்து மொரிசியஸ் நாட்டிற்கு, ஏர் மொரிஷியஸ் விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. வாரத்தில் 2 நாட்கள்(செவ்வாய் மற்றும் வெள்ளி) ஆகிய இரு தினங்கள் இயக்கப்பட்ட இந்த விமான சேவைகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த விமான சேவையை 4 ஆண்டுகளுக்குப் பின்பு வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து மீண்டும் தொடங்க இருப்பதாக அந்நாட்டு விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஹாங்காங் - மொரிஷியஸ் விமான சேவை, பயணிகளுக்கு மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். குறிப்பாக ஹாங்காங் விமான சேவை, தொழில்துறையினருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவைகளாக விளங்கி கொண்டு இருந்தது. அதோடு ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்பவர்களுக்கு இணைப்பு விமானமாகவும் செயல்பட்டு வந்தது. இதனால் தொழில் துறையினர் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதைப்போல் ஏர் மொரிஷியஸ் விமானம், மாணவ மாணவிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த விமான சேவையாக செயல்பட்ட வந்தது. ஏனெனில் மொரிசியஸ் நாட்டில் பல்வேறு மருத்துவ கல்லூரிகள் மற்றும் உயர் படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காதவர்கள் ஏராளமான மாணவ மாணவிகள் மொரிசியஸ் மருத்துவ கல்லூரிகளில் படித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக மொரிசியஸ்க்கு சென்னையில் இருந்து 4 ஆண்டுகளாக விமான சேவைகள் இல்லாததால், இந்த மாணவ மாணவிகள், மும்பை அல்லது துபாய் சென்று மொரிசியஸ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அதிக பண செலவு, பயண நேரம் ஏற்பட்டு மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இப்போது மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் இந்த அறிவிப்பு மாணவ மாணவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மொரிசியஸ் சுற்றுலா தளத்திலும் சிறந்து விளங்குவதால், சுற்றுலாப் பயணிகள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை! குற்றவியல் நடவடிக்கை என எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.