ETV Bharat / state

சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவை... நிறைவேறிய தமிழர்களின் கோரிக்கை..!

மலேசியா நாட்டின் தனித்தீவு பினாங்கிற்கு சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகின்ற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது.

விமானங்கள் (கோப்புப்படம்)
விமானங்கள் (கோப்புப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: மலேசியாவில் உள்ள பல்வேறு தீவுகளில் பினாங்குத் தீவும் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவாகும். இங்கு பெருமளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்தப் பினாங்கு தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த தீவிற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர், தாய்லாந்து, சீயோல், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியது

ஆனால், இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள் தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தனர்.

ஆனால், இந்திய விமான நிலைய ஆணையம் அதற்கான அனுமதியை வழங்காததால் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: "எல்ஐசி இணையதளத்தை இந்தி திணிப்பு பிரச்சார கருவியாக மாற்றுவதா?" - முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

இந்த நிலையில், தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் இந்திய விமான நிலைய ஆணையம் பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் இந்தியாவில் இருந்து தொடங்க அனுமதி அளித்தது.

இதையடுத்து சென்னையில் இருந்து வருகின்ற டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பினாங்கிற்க்கு நேரடி தினசரி விமானத்தை இயக்கத் தொடங்குகிறது.

180 பேருக்கு மேல் பயணிக்கலாம்

டிசம்பர் 21 (சனிக்கிழமை) முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலையில் பினாங்கு தீவை சென்றடையும். அதன் பின்பு பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

இந்த விமானம் சுமார் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய ஏர் பஸ் 320 ரகத்தை சேர்ந்தது. சென்னை-பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும்.

தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பினாங்கிற்கு நேரடி தினசரி விமான சேவை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்குவது தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.