ETV Bharat / state

புயல் எச்சரிக்கை? தமிழகத்திற்கு ஆபத்தா? வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன? - Rain Alert

Indian Meteorological Department: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Representational Image (IMD)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2024, 11:43 AM IST

சென்னை: இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வடமேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் நேற்று (செப்.7) நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செப்.8) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 260 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் பாரதீப்பில் இருந்து தென் தென்கிழக்கே 290 கிலோ மீட்டர் மேற்கு வங்க மாநிலம் திகாவில் இருந்து தெற்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் பிறகு, இது அடுத்த 2 நாட்களில் வடக்கு-ஒடிசா-கங்கை நதி மேற்கு வங்கம், ஜார்கண்ட் மற்றும் அதை ஒட்டிய வடக்கு சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செப்.23ல் தமிழக வெற்றிக் கழக மாநாடு! காவல் துறை அனுமதி! - TVK Manadu police permission

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.