தஞ்சாவூர்: நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, வேட்பு மனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூரில் இன்று (மார்ச் 26) இயற்கை விவசாயி தங்கராசு என்பவர், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் பானையுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளார்.
அப்போது, அவர் தேர்தல் உதவி மையத்தில் விண்ணப்பம் பூர்த்தி செய்வது மற்றும் இதர விவரங்கள் அளிப்பது தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நேரம் 3 மணியானதால் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றைய நேரம் முடிவடைந்து விட்டது எனக் கூறியுள்ளனர்.
இதனால் அதிகாரிகள் வேட்பு மனு செய்ய இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்த விவசாயி பெரும் ஏமாற்றம் அடைந்து, மீண்டும் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். முன்னதாக பானையுடன் வந்த அவர் கூறுகையில், “குளிப்பது முதல் குடிப்பது வரை காவிரி தண்ணீர் தான், கர்நாடக அரசு காவிரியைத் தடுக்கிறது, இங்குள்ளவர்கள் யாரும் காவிரியை மதிக்கவில்லை.
அதனால் காவிரிக்கு ஒரு ஆலயம் கட்ட வேண்டும், மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தியு,ம் பானையில் பணத்தை சேகரித்து வேட்பு மனுத் தாக்கல்” செய்ய வந்ததாக கூறினார். வேட்பு மனுத் தாக்கல் செய்ய நேரம் முடிவடைந்ததால், விவசாயி தங்கராசு வருத்தத்துடன் வீட்டிற்குச் சென்றார்.
இதையும் படிங்க: வேட்புமனுவை மறந்த தஞ்சாவூர் தேமுதிக வேட்பாளர்.. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் வேட்புமனு தாக்கல்! - DMDK CANDIDATE NOMINATION