ETV Bharat / state

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகள்.. அழகிய ட்ரோன் காட்சிகள்! - elephants Problem in Nilgiris

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 6:08 PM IST

Migrating elephants in Nilgiris: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைக் கூட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டுள்ளதை வனத் துறையினர் மற்றும் யானை விரட்டும் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

காட்டு யானைக் கூட்டம்
காட்டு யானைக் கூட்டம் (Credits- ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கேரளாவில் இருந்து நீலகிரிக்கு இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைக் கூட்டம் பந்தலூர் அருகே எலியாஸ் கடை பகுதியில் முகாமிட்டுள்ளன. இவற்றை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் யானை விரட்டும் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து பெய்த மழையால் தற்போது பந்தலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றி உள்ள வனப்பகுதிகள் தேயிலைத் தோட்டங்கள் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

இதனால் கேரளாவில் இருந்து தற்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வர துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக சேரங்கோடு மலைகளில் முகாமிட்டுள்ள இந்த காட்டு யானை கூட்டம் தற்போது எலியாஸ் கடை, சேரம்பாடி போன்ற பகுதிகளை உலா வருகிறது.

தற்போது முகமிட்டுள்ள காட்டு யானைகளை வனத்துறையினர் மற்றும் யானை வரட்டும் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வரும் நிலையில் தனிக் குழு அமைத்து யானை கூட்டம் கிராம பகுதிக்குள் செல்வதை தடுத்து வருகின்றனர். யானைகள் கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வனப் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கூடலூர் பகுதியில் பொதுமக்களை விரட்டிய ஒற்றை காட்டு யானை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.