ETV Bharat / state

சென்னை ஐஐடி, நாசா ஆராய்ச்சியாளர்கள் மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு! - IIT Madras NASA - IIT MADRAS NASA

IIT Madras - NASA: சென்னை ஐஐடி, நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

சர்வதேச விண்வெளி மையம், நுண்ணுயிரி புகைப்படம்
சர்வதேச விண்வெளி மையம், நுண்ணுயிரி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 4:40 PM IST

சென்னை: சென்னை ஐஐடி மற்றும் நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில், மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கும், பூமியில் வசிப்போருக்கும் இதனால் முக்கிய பயன்பாடுகள் கிடைக்கப் பெறலாம். மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளில் காணப்படும் மரபணு, செயல்பாட்டு, வளர்சிதை மாற்ற மேம்பாடுகளைப் புரிந்து கொள்வதற்காக விரிவான ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

குறிப்பாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேற்பரப்புகளில் காணப்படும் பொதுவான நோய்க்கிருமிகளான Enterobacter Bugandensis மீது இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. வழக்கமான மருத்துவ வசதிகளிலிருந்து மாறுபட்ட நோய் எதிர்ப்பு சூழலில் உள்ள விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிப் பயணங்களின் போது தனிப்பட்ட ஆரோக்கிய சவால்களை எதிர்கொள்கின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தில் இந்த நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் தாக்கத்தை மதிப்பீடு செய்ய வேண்டுமெனில், விண்வெளி நிலையத்தில் உள்ள நுண்ணுயிர்ப் பரவல் குறித்த புரிதல் அவசியமாகிறது.

விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும், எதிர்பாராத சூழலில் நோய்க்கிருமிகள் தொடர்புடைய அபாயங்களைக் குறைப்பதற்கும், விண்வெளி சூழலில் நுண்ணுயிரிகளின் நோய்க்கிருமித் திறனை ஆராய வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

சென்னை ஐஐடி மற்றும் நாசாவின் ஜேபிஎல் இடையிலான கூட்டு முயற்சிகள், அறிவியல் அறிவை மேம்படுத்துவதிலும், விண்வெளி ஆராய்ச்சியில் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும், சர்வதேச கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்வதை இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. ஏனெனில், அங்குதான் பல்வேறு மருந்து எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளியைக் கவனித்துக் கொள்வதில் குறிப்பிடத்தக்க சவால்கள் ஏற்படுகின்றன.

ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் கார்த்திக் ராமன் கூறும்போது, "மிகவும் சவாலான சூழ்நிலைகளில் வளர்வதால் நுண்ணுயிரிகள் நம்மைத் தொடர்ந்து புதிரில் ஆழ்த்தி வருகின்றன. இதுபோன்ற ஆய்வுகள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் சிக்கலான தொடர்புகளை அவிழ்க்க உதவிக்கரமாக இருக்கும்" என தெரிவித்தார்.

ஆராய்ச்சியின் செயல்பாடு குறித்து நாசாவின் ஜேபிஎல் மூத்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன் கூறும்போது, "சர்வதேச விண்வெளி நிலையத்தில் சாதகமற்ற சூழல்கள் நிலவுவதால், தீங்கற்ற நுண்ணுயிரிகள் எவ்வாறு மனித நோய்க்கிருமியான E.bugandensis-ஐத் தழுவி உயிர்வாழ உதவுகின்றன என்பது குறித்த நுண்ணுயிர் சமூகத் தொடர்புகளை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட அறிவு, தீவிரமான, தனிமைப்படுத்தப்பட்ட சூழல்களில் நுண்ணுயிரிகளின் நடத்தை, தகவமைப்பு மற்றும் பரிணாமத்தைப் பற்றிய புரிதலைத் தரும். எதிர்கால நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்கும் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், புதிய எதிர்கொள்ளும் உத்திகளை வடிவமைக்க புதிய நடவடிக்கை உதவும். இதனால் விண்வெளி வீரர்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெவ்வேறு இடங்களில் E.bugandensis கிருமி திரிபுகளின் விரிவான மரபணு அம்சங்கள் மற்றும் சாத்தியமான நுண்ணுயிர் எதிர்ப்பு வழிமுறைகளை ஆராய்ச்சி குழு அடையாளம் கண்டுள்ளது. விண்வெளி சூழலில் உள்ள மன அழுத்தங்களுக்கு முக்கிய மரபணுக்களின் பரிணாம வளர்ச்சியையும் அவற்றின் விளைவுகளையும் பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேம்பட்ட அமைப்புகள் உயிரியல் அணுகுமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், சர்வதேச விண்வெளி மையம், E.bugandensis பிற நுண்ணுயிரிகளுக்கு இடையேயான தொடர்புகளின் சிக்கலான வலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இது நுண்ணுயிர் வளர்ச்சி இயக்கவியலை பாதிக்கும் ஒட்டுண்ணி மற்றும் ஒன்றை ஒன்றோடு ஒன்று இணைந்து வாழும் உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.

பின்வரும் காலங்களில் E.bugandensis பரவல் மற்றும் விநியோகத்தை வரைபடமாக்குவதன் மூலம், ஆய்வு அதன் நிலைத்தன்மை, வாரிசு மற்றும் விண்வெளியில் சாத்தியமான காலனித்துவ முறைகள் பற்றிய மதிப்பு வாய்ந்த நுண்ணறிவுகளை கிடைக்கச் செய்யும்.

இந்த ஆராய்ச்சியின் மூலம், மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளின் மரபணுத் தழுவல்களைப் புரிந்துகொள்வது, திட்டமிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்க உதவும் விண்வெளியில் மருந்து - எதிர்ப்பு நோய்க்கிருமிகளின் நிலைத்தன்மை மற்றும் வாரிசு முறைகள் பற்றிய நுண்ணறிவு, விண்கலம் மற்றும் மருத்துவமனைகள் போன்ற மூடிய சூழல்களில் நுண்ணுயிர் மாசுபாட்டை நிர்வகிப்பதற்கான உத்திகளை அளிக்கலாம்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்படும் முறையானது, மரபியல், மெட்டஜெனோமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்ற மாதிரி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மற்ற தீவிர சூழல்களில் நுண்ணுயிர் இயக்கவியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம். நுண்ணுயிர் சூழலியல் மற்றும் தழுவல் பற்றிய நமது புரிதல் இதனால் மேம்பாடு அடையும்.

இதையும் படிங்க: “தமிழிசை செளந்தரராஜனை பாஜக கைவிட்டு விட்டது” - செல்வப்பெருந்தகை பேச்சு! - Selvaperunthagai

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.