ETV Bharat / state

சென்னை ஐஐடி வளாகத்தில் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் - HMIL அறிவிப்பு! - Hydrogen Innovation Centre

Hydrogen Innovation Centre: சென்னை ஐஐடியின் தையூர் வளாகத்தில் 65 ஆயிரம் சதுர அடியில் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையத்தை தொடங்கவிருப்பதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) அறிவித்துள்ளது. மேலும், இந்த மையம் 2026-ல் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 5:14 PM IST

சென்னை: சென்னை ஐஐடியின் உத்திசார் கூட்டாண்மை, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் புதிய ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஹைட்ரஜன் தொழில்நுட்பத் துறையில் புதுமைக்கான ஊக்கியாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் செயல்படும். இத்திட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார்.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் ஆதரித்தலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக 180 கோடி ரூபாயை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் முதலீடு செய்யும்.

இது குறித்து எச்எம்ஐஎல் நிறுவனத்தின் முழுநேர இயக்குனரும், தலைமை உற்பத்தி அதிகாரியுமான கோபாலகிருஷ்ணன் சாத்தபுரம் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், “மாற்று எரிபொருள் மூலம் நீடித்த சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான தமிழ்நாடு அரசின் இலக்கில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஒரு உத்திசார் கூட்டாளியாக செயல்பட உறுதி பூண்டிருக்கிறது. ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் பயன்பாட்டுக்கு மாற்றுவதை விரைவுபடுத்தும் என நம்புகிறோம்.

சென்னையில் உள்ள ஐஐடி தையூர் வளாகத்தில் ஆய்வக வசதிகளை உருவாக்குவதற்காக 100 கோடி ரூபாயை எச்எம்ஐஎல் முதலீடு செய்யவிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, உமிழ்வு குறைவான எதிர்கால உந்துசக்தியாகவும், மக்கள் பயன்பாட்டுத் தீர்வுகளைக் கொண்டதாகவும் இந்த ஆய்வகம் இயங்கும்” என்றார்.

இது குறித்து சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி கூறும்போது, “சென்னை புறநகரில் அமைந்துள்ள ஐஐடி தையூர் வளாகத்திற்குள் 65 ஆயிரம் சதுர அடியில் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் அமைக்கப்படும். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் வல்லரசாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் சென்னை ஐஐடி தொடர்ந்து முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.

இந்தப் பயணத்தைத் தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டு முயற்சியில், ஹைட்ரஜன் பயன்பாட்டுத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வகையில் பிரத்யேக ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறது. ஹைட்ரஜன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ஒரு ஊக்கியாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் செயல்படும்.

ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும்” எனத் தெரிவித்தார். ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு மையம் 2026-ல் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பின் முழுமையான வளர்ச்சியை வளர்ப்பதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவக்கம் - Medical Admission Counselling

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.