ETV Bharat / state

மனைவியின் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு.. கணவர் விபரீத மரணம்! - Husband Died electric shock - HUSBAND DIED ELECTRIC SHOCK

ELECTRIC SHOCK DEATH: சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளுக்கு சீரியல் பல்ப் செட்டிங் செய்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி மனைவியின் கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:35 PM IST

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவர் சொந்தமாக மேற்கு மாம்பலம் பகுதியில் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூன் 6) தனது மனைவியின் 25வது பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

அப்போது மாலை வீடு முழுவதும் அலங்காரம் செய்யும் பணியின் அங்கமாக, பிறந்தநாள் கொண்டாடப்படும் செட்டிங்கிக்குள் சீரியல் பல்பை பொருத்துவதற்காக முயன்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அகஸ்டின் பால்- கீர்த்தி தம்பதிக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்த நிலையில், மனைவி கண் எதிரே மின்சாரம் தாக்கி அகஸ்டின் பால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உதவி செய்வது போல் நாடகமாடி சிறுமியைக் கடத்திய இளைஞர் - போலீசில் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.