சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த சோலையூர் ராஜ ஜய்யர் தொருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி (68). இவர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கழமை (ஏப்.12) இரவு சுமார் 8 மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் அருகில் மர்ம நபர் ஒருவர் அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை அச்சுறுத்தும் வகையில் கலாட்டா செய்து வருந்துள்ளார்.
இதனை அறிந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக அவரிடம் சென்று பெண்களிடம் கலாட்டா செய்து ஆபாச வார்த்தைகளில் பேச வேண்டாம் இங்கிருந்து பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என கூறியிள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் கிருஷ்ணமூர்த்தியை தாக்கியதால் நிலை தடுமாறி கிழே விழுந்தார்.
இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டதால் அந்த மர்ம நபர் தப்பி ஓடினார். ஆனால் பொதுமக்களில் சிலர் மர்ம நபரை பிடித்து வைத்து விட்டு உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் காவல்துறையினர் சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்த கிருஷ்ணமூர்த்தியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த மர்ம நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர், காவல்நிலைத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கஞ்சா போதையில் இருந்ததும், அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (38) என்பதும் கார் டாக்ஸி ஓட்டுநர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சேலையூர் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட சிவராமன் மீது கொலை வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விராட் கோலிக்கு மெழுகு சிலை! ஜெய்ப்பூர் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவல்! - Virat Kholi Wax Statue