ETV Bharat / state

சாப்பிட்டு காசு கொடுக்க மறுத்த நபர்.. பட்டா கத்தியுடன் கோதாவில் குதித்த ஹோட்டல் உரிமையாளரின் மகன்! - Hotel attack in Tiruvarur - HOTEL ATTACK IN TIRUVARUR

Hotel Sickle Attack: திருவாரூரில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்க மறுத்த நபரை ஹோட்டல் உரிமையாளர் மகன் அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் ஹோட்டல் தகராறு புகைப்படம்
திருவாரூர் ஹோட்டல் தகராறு புகைப்படம் (Credit: ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 6:56 PM IST

Updated : May 5, 2024, 7:32 PM IST

சாப்பிட்டு காசு கொடுக்க மறுத்த நபர் அரிவாளால் வெட்டிய காட்சி (Credit: ETV Bharat)

திருவாரூர்: திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தியாகப்பெருமா நல்லூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது மனைவி ஜெயா (45). இவர் புதிய பேருந்து நிலையத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக, இவரது இளைய மகன் லோகேஷ் ஹோட்டலில் பணி செய்து வருகிறார்.

இந்த நிலையில், சத்தியபாலன் (30) என்பவர் போதையில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இந்த ஹோட்டலுக்கு இன்று மதியம் சாப்பிட வந்துள்ளார். இதனையடுத்து, சத்தியபாலனும், அவரது நண்பர்களும் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஹோட்டல் உரிமையாளர் ஜெயா மற்றும் அவரது மகன் லோகேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயா, வெங்காயம் வெட்டும் கத்தியால் சத்தியபாலனின் கையில் குத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் பிரச்னை அதிகமாகவே, இச்சம்பவம் குறித்து ஜெயா தனது மூத்த மகன் விக்னேஷிடம் (22) கூறியுள்ளார்.

இதனையடுத்து பட்டா கத்தியுடன் சம்பவ இடத்திற்கு வந்த விக்னேஷ், சத்தியபாலனின் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சத்தியபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சத்தியபாலன் திருவாரூர் அருகே உள்ள சிங்களாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் மினி பஸ் ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பட்டா கத்தியுடன் விக்னேஷ் சம்பவ இடத்திற்கு வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவாரூர் நகர காவல் துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் காவலரைத் தாக்கிய இளைஞருக்கு உருட்டுக் கட்டையால் அடி.. அதிர்ச்சி வீடியோ வைரல்! - POLICE ATTACK YOUTH WITH STICK

Last Updated : May 5, 2024, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.