சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த மாதம் 5-ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடிகளான நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்ளிட்ட 27 நபர்களை செம்பியம் தனிப்பட்ட கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும், சிலரை தனி இடத்தில் வைத்து செம்பியம் தனிபடை போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டு தலைமுறைகளாக உள்ள பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் அவருக்கு உடந்தைடியாக இருந்த வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரும் வெளிநாடு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்டோர் போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டு அவர்களை கைது செய்து சென்னை அழைத்து வரும் முனைப்பில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த திருவேங்கடம் என்ற ரவுடி துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த போது விமான நிலையத்தில் வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து சென்னை செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர், விமான நிலையம் சென்ற செம்பியம் போலீசார் திருவங்கடத்தை கைது செய்து தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 28-ஆவது நபராக ரவுடி திருவேங்கடம் துபாயில் இருந்து சென்னை திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "போலீஸ் விசாரித்தது உண்மைதான்! ஆனால்..." - நெல்சன் மனைவி அளித்த விளக்கம்