ETV Bharat / state

மாநிலக் கல்வி கொள்கை: நீதிபதி முருகேசன் குழு பரிந்துரையின் முக்கிய அம்சங்கள்! - TN state education policy - TN STATE EDUCATION POLICY

தமிழ்நாட்டிற்கு என உருவாக்கப்பட்ட தனிக் கல்விக் கொள்கையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு தமிழக அரசிற்கு செய்துள்ளது.

குழு அறிக்கை சமர்பித்த புகைப்படம்
குழு அறிக்கை சமர்பித்த புகைப்படம் (Credits - TN DIPR X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 7:30 PM IST

சென்னை: தமிழக அரசு மாநிலக் கல்வி கொள்கை தயாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்துள்ளது.

இந்த குழுவில் உறுப்பினர்களாக பேராசிரியர் ராம சீனுவாசன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், முனைவர் அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், துளசிதாசன், டி.எம்.கிருஷ்ணா, பாலு, முனைவர் ப்ரீடாஞானராணி, பழனி, குழுவின் உறுப்பினர் செயலராக பள்ளிக்கல்வித்துறையில் முன்னாள் இயக்குனராக இருந்த ஏ. கருப்பசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

தமிழ்நாட்டிற்கான தனித்துவமான கல்விக் கொள்கை ஆங்கிலத்தில் 550 பக்கங்களும், தமிழில் 600 பக்கங்களும் உள்ளது. நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவை:

  • கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
  • பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாகக் கற்பிப்பது அவசியமாகும்.
  • தொடக்க நிலை முதல் பல்கலைக்கழகம் வரை கல்வியை தமிழில் கற்பது கல்வி உரிமையாகும்.
  • தமிழ் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
  • தமிழ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரிகளுக்குப் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.
  • மாணவர்கள் முதல் வகுப்பில் கல்வியாண்டில் ஜூலை 31 ஆம் தேதி 5 வயது முடிந்தாலும், பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும்.
  • பள்ளிகளில் 5+3+2+2, என்ற முறையில் உள்ள கல்விமுறையே தொடர வேண்டும். அதாவது தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்ற முறையில் நடைபெற வேண்டும்.
  • தற்போதுள்ள பாடத்திட்டம் மொழி, கணிதம், அறிவியல் போன்ற கருத்தில் முழுக்க முழுக்க ஒழுக்கத்தால் வழங்கப்படுகிறது.
  • கலாச்சார, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றம், சமூக சமத்துவம் மற்றும் நீதி பற்றிய கருத்துகளையும் இணைத்து ஒரு சமூகத்தைச் செயல்படுத்தும் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
  • பாடத்திட்டம் சமூக மற்றும் கலாச்சார நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும், அறிவு, அன்றாட வாழ்க்கை, அரசியலமைப்பு மதிப்புகளையும் இணைக்கும் வகையில் இருக்க வேண்டும்.
  • பள்ளி முதல் மாணவர்கள் புரிந்து தானாக கற்கும் வகையில் படிப்படியாக அனைத்து மட்டங்களிலும் பாடத்திட்டத்தின் வழிகாட்டும் கொள்கை அமைக்கப்பட வேண்டும்.
  • பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்பறையில் தொழில்நுட்பங்களைக் கட்டாயம் அனுமதிக்க வேண்டும்.
  • மாணவர்களின் வளர்ச்சி, அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளின் படி குழுவாக கற்கவும் வழிவகை செய்ய வேண்டும்.
  • மாணவர்கள் 10 ஆம் வகுப்பில் பொது வாரிய தேர்வுகளை எழுதும் வரை பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.
  • அதில், போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஒரு மனநல ஆலோசகர், ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோர் கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக் குழு அமைக்கலாம்.
  • இரு பெற்றோர்களையும் இழந்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
  • தமிழ், ஆங்கிலம் இருமொழி கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
  • உயர்கல்வியில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறை இருக்கக்கூடாது. அதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும்.
  • கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.
  • தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற போதே படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்றக் கூடாது.
  • மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தால் அதனை முடிக்கும் வரையில் தொடர்ந்து படிக்க வேண்டும். இடையில் வெளியேற அனுமதிக்கக் கூடாது.
  • மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.
  • அனைத்து தாய் - குழந்தை பராமரிப்பு மையம் மற்றும் ECCD (Early Childhood Care and Development) நிறுவனங்களையும் ஒரே அதிகாரத்தின் கீழ் கொண்டு வர கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் பரிந்துரைக்கிறது.
  • தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள், முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிப் பள்ளிகள், மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.
  • கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
  • மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு, தடகள நிகழ்வுகளில் கலந்துகொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி உறுதி செய்யப்பட வேண்டும்.
  • உயர்கல்வியில் (open book assessment) தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.
  • நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் - அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - KALRAYAN HILL PEOPLE LIFESTYLE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.