ETV Bharat / state

" 'கூல் லிப்' சாப்பிட்டால் இளமையாக இருக்கலா?" - விளம்பரம் குறித்து நீதிமன்றம் கடும் அதிருப்தி! - COOL LIP CASE

'கூல் லிப்' பாக்கெடில் உள்ள எச்சரிக்கை வாசகம் "இறக்கும் வரை இளமையாகவே இருக்கலாம்" என புரிந்து கொள்ளும் விளம்பரம் போல் உள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 6:27 PM IST

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.

அது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கூல் லிப் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

குட்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 10% குழந்தைகள் ஏதேனும் ஒரு போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். என அறிக்கை கூறுகிறது. குடும்ப பிரச்சனை, தனிநபர் துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் போதை மருந்துகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கோட்பா விதிகளால் முறைப்படுத்தப்படுகிறது. கோட்பா விதிகளின் படி எச்சரிக்கை விடும் வகையிலான வாசகங்கள், புகைப்படங்கள் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்பட்டுள்ளது" திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் என்ற பாடல் போல தான் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சென்னைக்கு கனமழை எச்சரிக்கை; வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்!

அதையடுத்து நீதிபதிகள், "மெல்லும் வகையிலான போதை பொருட்களுக்கு தடை விதிக்க கோரி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல்களை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் கோட்பா விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் மண்டை ஓட்டு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? அதன் எச்சரிக்கை வாசகம் "Tobacco users die younger" என உள்ளது. அதனை "புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்" என பொருள் கொள்ளாமல், "இறக்கும் போதும் இளமையாக இருக்கலாம்" என தவறாக புரிந்து கொண்டால், அது விளம்பரம் போல் ஆகிவிடும்.

ஆகவே புகையிலை போதைப்பொருட்களின் பாக்கெட்டுகளில் மண்டை ஓட்டு படம் அச்சிடப்படுவது தொடர்பாக குட்கா நிறுவனங்கள் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கு வேறு எம்மாதிரியான எச்சரிக்கைகளை வழங்கலாம்? என்பது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.