ETV Bharat / state

மதுரையில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு - street dog issue

Madurai is plagued by stray dogs: தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மதுரை மாநகராட்சியில் கால்நடை மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

high court Madurai bench
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 8:30 AM IST

மதுரை: மதுரை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி என்பவர் மதுரை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெரு நாய்கள் சாலைகள் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. நாய்கள் கடித்து பலருக்கு ரேபிஸ் நோய் (Rabies virus) பரவி வருகிறது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதையடுத்து, மதுரை மாநகராட்சியில் எத்தனை கால்நடை மருத்துவர்கள் இருக்கின்றனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மாநகராட்சி தரப்பில், தற்போது 2 கால்நடை மருத்துவர்கள் கால்நடை மருத்துவமனையில் பணியில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மாநகராட்சியில் கூடுதல் கால்நடை மருத்துவர்கள் நியமிக்கத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும், வழக்கு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இன்று 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு! எந்தெந்த தொகுதிகளில் யார்.. யார்.. போட்டி? முழு விபரம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.