ETV Bharat / state

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வழக்கறிஞர் மின்சார ரயில் மோதி பலி..! - உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பலி

Train Accident: பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

high court lawyer died hit by a train near Perungalathur
சென்னை அருகே ரயில் மோதி வழக்கறிஞர் பலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 7:23 AM IST

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தவள்ளி (49). சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர், தற்போது புது பெருங்களத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வழக்கமாக பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிலையம் சென்று பணிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (பிப்.15) பணிக்கு செல்வதற்காக வழக்கம்போல் பெருங்களத்தூர் ஏரிக்கரை பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுள்ளார் அமிர்தவள்ளி. அதற்காக அவர் ரயிவே தண்டவாளத்தைக் கடந்து செல்லும் போது செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அமிர்தவள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாம்பரம் இருப்புப்பாதை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வழக்கறிஞர் அமிர்தவள்ளியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் தண்டாவாளத்தை கடக்க முயன்ற போது, மின்சார ரயில் மோதி வழக்கறிஞர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் இது போன்று ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பதியில் சிங்கம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு! உயிரியல் பூங்காவில் சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.