ETV Bharat / state

திமுக குறித்து விஜய் விமர்சனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரியாக்சன் என்ன? - HEALTH MINISTER ON VIJAY CRITICISM

திமுக குறித்து தவெக தலைவர் விமர்சனம் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது என்றும், வளர்ச்சி தவிர மற்றவற்றில் கவனம் சிதையாது என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

விஜய், அமைச்சர் மா.சுப்பிரமணியன்
விஜய், அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2024, 3:44 PM IST

Updated : Oct 28, 2024, 3:56 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டுமானத்திற்கான பணிகளை பூமி பூஐையுடன் துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கான புதிய கட்டமைப்புகளை தமிழகம் முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையில் உள்ள சென்னை துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. புதிய வகுப்பறைகள், வாகனம் நிறுத்தும் இடம், கழிவறை, சத்துணவுக்கூடம் போன்ற பல்வேறு வசதிகள் 5 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

திமுக முக்கால் நூற்றாண்டை கடந்துவிட்டது: திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுவதாக திமுக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “திமுகவில் உள்ளவர்களும் திமுகவை பற்றி அறிந்தவர்கள். ஆனாலும் திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டை கடந்து தமிழ்நாட்டுக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல்; விஜய் கருத்துக்கு அரசியல் மேடைகளில் எதிர்வினை ஆற்றுவோம் - அமைச்சர் பெரிய கருப்பன்!

கவனம் சிதையாது சிதறாது: திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சிப் பணிக்கு ஒரு சிறு துரும்பை கூட எடுத்து போட்டு இருக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சைதாப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சாலை வசதிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பணிகளை செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் மட்டும் அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டால் நீண்ட நேரமாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும், மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதையாது சிதறாது” என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 28, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.