ETV Bharat / state

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? - தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி! - Tasmac Shops Issue - TASMAC SHOPS ISSUE

Tasmac Shops Issue: வழிபாட்டுத் தலங்கள் அருகே டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சாத்தான்குளம் பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை 3 மாதங்களில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 9:40 AM IST

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் முத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தாலுகா தர்மபுரி பகுதியில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் மற்றும் அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உள்ளாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. அதனை அடுத்து ஊராட்சிமன்ற கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது தொடர்பாக மதுரை அமர்வில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட்ட நிலையில், ஏற்கனவே கடை அமைந்த இடத்திற்கு எதிர்புறத்தில் கடை திறக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் டாஸ்மாக் கடைகளை அமைப்பது சட்டவிரோதமானது. ஆகவே, தூத்துக்குடி மாவட்டம் தர்மபுரி பகுதியில் டாஸ்மாக் கடையைத் திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் நேற்று (செப்.6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகில் டாஸ்மாக் கடைகளை வைப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், "6 மாதங்களுக்குள்ளாக, அந்த டாஸ்மாக் கடை அகற்றப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "3 மாதங்களுக்குள்ளாக டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தெரு நாய்கள் தொல்லை: இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? - நீதிபதிகள் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.