ETV Bharat / state

மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கோரிய வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு! - புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு

Pudukkottai Manju virattu Permission case: புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி தர உத்தரவிடக்கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 8:17 PM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி சேர்ந்த மலையாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நான் 13 நாட்டு ரக ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்த்து வருகிறேன். கடந்த ஆண்டு வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளித்து வந்த நிலையில், இந்த ஆண்டு தை மாதம் முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

ஆனால் அருகாமை மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளிக்காத நிலையில் கோயில் திருவிழாக்களும் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்விதப் பதிலும் இல்லை.

எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: மதுரை இசக்கி வழக்கு; சாத்தான்குளம் வழக்கை மேற்கோள்காட்டிய உயர் நீதிமன்றக்கிளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.