ETV Bharat / state

இந்துக்கள் அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை..! மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு! - non hindus not allowed Palani

palani temple: இந்துக்கள் அல்லாதவர்களைப் பழனி கோயிலுக்குள் அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

HC madurai bench ordered non hindus should not be allowed inside the palani temple
இந்துக்கள் அல்லாதவர்கள் பழனி கோயிலுக்குள் நுழையத் தடை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 12:52 PM IST

மதுரை: பழனி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க கோரி, பழனியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பிரசித்தி பெற்ற முருகன் கோயில் பழனியில் உள்ளது. இந்த கோயிலுக்குத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கின்றது.

எனவே, இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது எனத் தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவரும் திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உள்ள சூழலில், பழனி முருகன் திருக்கோயிலுக்குள் நுழையத் தடை என்ற அறிவிப்புப் பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது.

இந்து அல்லாத சிலர் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழையத் தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, இதுகுறித்து இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர், இந்த வழக்குத் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று (ஜன.30) வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, “இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது. இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையைக் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால், கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம். மேலும், இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: "விரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படும்" -ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.