ETV Bharat / state

பழனி பஞ்சாமிர்தம் விவகாரம்: உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை 'X' தளத்தில் பதிவிடுவதை தவிர்க்கவும் என நீதிபதி அறிவுரை! - Palani Panchamirtham issue

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி வினோத் செல்வம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில், வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் முன் ஜாமீன் தேவையில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 2:03 PM IST

மதுரை: பழனி முருகன் கோயில், பஞ்சாமிர்தம் தயாரிக்கத் திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக பாஜக நிர்வாகி செல்வகுமார் சமூக வலைத்தளங்களில் தகவலைப் பரப்பி இருந்தார்.

இதனை மறுத்த கோயில் நிர்வாகம், பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாகத் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக, பழனி அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோஜ் பி.செல்வம் மீது புகார் அளிக்கப்பட்டது. தற்போது, இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக்கோரி பாஜக வினோத் செல்வம் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று (செப்.27) நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி, "கோயில் நலனில் அக்கறை உள்ளவர்கள். கோயிலுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்பும் வகையில் செயல்படக் கூடாது என்றார்.

இதையும் படிங்க: பழனி பஞ்சாமிர்தம் குறித்த அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை முன்ஜாமீன்!

அதைத் தொடர்ந்து, மனுதாரர் பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்துகளைப் பதிவிடும் முன், ஆய்வு நடத்தி உறுதி செய்த பிறகு இந்த பதிவைப் பதிவிட்டாரா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, கருத்தியல் ரீதியாக எதிர் தரப்பினர் 'X' தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு சண்டை போட்டால் நமக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், X தளத்தின் உரிமையாளருக்குத் தான் லாபம் கிடைக்கும். எனவே, உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை 'X' தளத்தில் பதிவிடுவதைத் தவிர்க்கவும் எனக் கருத்து தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் குறித்த புகாரின் அடிப்படையில் பழனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படாத சூழலில், முன் ஜாமீன் தேவையற்றது எனக்கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.