ETV Bharat / state

எங்கள் இடம் ஆக்கிரமிப்பா? அதிகாரிகள் முன்பே விபரீத முடிவெடுத்த இளைஞரால் பரபரப்பு! - Gummidipoondi Youth set fire

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 10:18 PM IST

Gummidipoondi: கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு எனக் கூறி அகற்றச் சென்ற அதிகாரிகள் முன்னிலையில் இளைஞர் தன் மீது தீ பற்ற வைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youth set fire
இளைஞரின் விபரீத செயல் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரையைச் சேர்ந்தவர்கள் தினகரன் - கல்யாணி தம்பதி. இந்த தம்பதி, சுமார் மூன்று வயது இருக்கும் போது கடந்த 50 வருடங்களுக்கு முன் பர்மாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை கல்யாணி இதுவரையில் பொக்கிஷமாக பாதுகாத்து வரும் நிலையில், கணவர் இறந்துள்ளார்.

இதனால் தனது இரண்டு மகன்கள் மகன்களுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டை கரை நேதாஜி நகர் 2வது தெரு தெருவில் 50 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கல்யாணியின் ஏழ்மையை அறிந்த ஒரு தம்பதி, தனக்குச் சொந்தமான ஒன்றரை சென்ட் நிலத்தை கல்யாணி கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்யாணியின் வீட்டின் பின்புறம் சிலர் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்து வருவதாகவும், அவர்களுக்கு சென்று வர இந்த இடத்தை கொடுக்குமாறும் மிரட்டல்கள் வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகளிடம் புகார் மனுவும் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த வட்டாட்சியர் கண்ணன், இடத்தை நேரடியாக ஆய்வு செய்து அந்த இடம் பட்டா இடம், எனவே நீதிமன்றத்தை நாடி முறையாக தீர்வு பெறுமாறு இருதரப்புக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே இடத்தை முறையாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான கடிதம் கொடுத்துள்ளதாகக் கூறி வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, கல்யாணியின் இளைய மகன் ராஜ்குமார் ஒரு வார காலம் அவகாசம் வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், மின்வாரியத் துறையினர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ராஜ்குமார் வீட்டை பூட்டிக்கொண்டு உடலின் மீது தீ பற்ற வைத்துள்ளார்.

பின்னர், அவர் அதிகாரிகள் முன்னிலையில் தெருக்களில் அலறிக்கொண்டு ஓடியுள்ளார். அவரை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், ராஜகுமாரின் உடல் 50 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு பகுதியில் அழகான வீடு.. இடித்து தள்ளிய நகராட்சி நிர்வாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.