ETV Bharat / state

சிஏஏ, குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல, குடியுரிமையைக் கொடுக்கும் சட்டம் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேச்சு! - TTV Dhinakaran criticized edappadi

TTV Dhinakaran criticized edappadi: சிஏஏ சட்டத்தைக் கொண்டு வருவது தவறில்லை, குடியுரிமை தர வேண்டும் என்றால் அது மத்திய அரசுதான் தரவேண்டும், மாநில அரசு அல்ல என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் பேச்சு
சிஏஏ குடியுரிமையை கொடுக்கும் சட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 7:37 PM IST

திருவண்ணாமலை: இஸ்லாமியர்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக் கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துப் பயமுறுத்தி வருவதாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், "ஒரு சிலரின் பதவி வெறி மற்றும் துரோகத்தினால் அதிமுக தற்போது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அதிகாரம், பண பலம், ஆள் பலம் இருந்த போது கூட ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அவர் செய்த துரோகத்திற்கு வருங்காலத்தில் பொதுமக்கள் தண்டனை தருவார்கள்.

பழனிச்சாமியின் வீழ்ச்சிக்குப் பிறகு அதிமுக மீண்டு எழும், நானும், பன்னீர்செல்வமும் அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றோம். வருங்கால அரசியலில் துரோகம் என்ற வார்த்தையைக் கண்டு அரசியல்வாதிகள் அஞ்சும் படி துரோகம் வீழ்த்தப்படும் என்பதற்கு உதாரணமாகப் பழனிச்சாமியின் வீழ்ச்சி இருக்கும்.

திமுகவையும், பழனிச்சாமியையும் வீழ்த்த பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம், அதன்படி நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம். திமுகவின் மூன்றாண்டுக் கால ஆட்சி என்பது சனியிடம் இருந்து பிடுங்கி எமனிடம் அளித்த கதையாக உள்ளது. விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், செவிலியர்கள் என பல தரப்பினருக்குத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அதில் 90 சதவிகிதம் நிறைவேற்றாத ஆட்சி, திமுக ஆட்சி.

நாங்கள் சரியானவர்கள் என்பதால் தான் பாஜக எங்களை அவர்கள் கூட்டணியில் சேர்த்து உள்ளது. உலக நாடுகள் அனைவரும் போற்றக்கூடிய தலைவராகப் பிரதமராக மோடி உள்ளார். மத்திய அரசு கொடுக்கக்கூடிய நிதியை வெளியே சொல்லாமல், மத்திய அரசு மாநிலத்துக்கு நிதி தரவில்லை என திமுகவினர் மறைக்கின்றனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என்பதைத் தினம் தினம் நேரில் பார்த்துக் கொண்டு உள்ளோம். யாருடைய குடியுரிமையையும் பறிக்கிற சட்டம் அல்ல சிஏஏ, குடியுரிமை கொடுக்கிற சட்டம் சிஏஏ. குடியுரிமை தர வேண்டும் என்றால் அது மத்திய அரசுதான் தரவேண்டும், மாநில அரசு அல்ல. சிஏஏ சட்டம் கொண்டு வருவது தவறு இல்லை.

இஸ்லாமியர்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக் கட்சிகள் சிஏஏ என்ற ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்துப் பயமுறுத்தி வருகிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது, அண்ணாமலை போன்ற தலைவர்களின் உழைப்பால் பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. அது இந்த தேர்தலில் எதிரொலிக்கும்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக கொடி, இரட்டை இலை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை - சென்னை உயர் நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.