ETV Bharat / state

பிரான்ஸ் நாட்டு அனுபவத்தை கவிதை மூலம் தெரிவித்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!

பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற ஆசிரியர்கள் தங்களின் அனுபவத்தை கவிதையாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் பாடிக் காண்பித்தனர்.

பிரான்ஸ் அனுபவத்தை அமைச்சரிடம் கவிதையாக பகிர்ந்த ஆசிரியர்கள்
பிரான்ஸ் அனுபவத்தை அமைச்சரிடம் கவிதையாக பகிர்ந்த ஆசிரியர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 2:01 PM IST

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களில் தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறிந்து, அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு 'கனவு ஆசிரியர்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டது.

அதில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்ற 32 தொடக்கக்கல்வி ஆசிரியர்கள், 22 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 54 பேர் அக்.23 முதல் அக்.28 வரை ஆறு நாட்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்குச் சென்றனர். அப்போது, தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர் அரவிந்தன் ஆகியோரும், பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்று, நேற்று தாயகம் திரும்பி உள்ளனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவிதை வாசிக்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: TNSTC-இல் 2,500க்கும் அதிகமான பணியிடங்கள்.. வெளியான புதிய அறிவிப்பு!

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற அவர்கள், பிரெஞ்சு புரட்சியில் புரட்சி சதுக்கம் என அழைக்கப்பட்ட அந்நாட்டின் பொது சதுக்கம், ஈஃபிள் கோபுரம், தேசிய நூலகம் தேசிய அருங்காட்சியகம் ஆகிவற்றை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி உடன் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற 54 ஆசிரியர்களும், மறக்க முடியாத அனுபவம் இது சார் என அமைச்சரிடம் நெகிழ்ந்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பயணத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சரை உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பாராட்டி ஆசிரியர்கள் கவிதை வாசித்துள்ளனர். அதில், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை விமானப் பயணம் பற்றியும், தாய்மொழி பற்று குறித்தும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்த அரசிற்கும் நன்றி தெரிவித்து கவிதைப் பாடினார்.

அதைத் தொடர்ந்து பேருந்து பயணத்தில் கவிதை வாசித்த ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஒரு காணொலி பார்த்த காரணத்தினால், இன்று பிரான்ஸ் நாடு வரை வந்துள்ளேன். அந்தக் காணொலியில் பேசியவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்றார். அந்தக் காணொலியில் ‘கனவு ஆசிரியர்’ குறித்த அறிவிப்பை வெளியிட்டார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.