சென்னை: செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கற்பகம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியை உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில், "ஆசிரியை உமா மகேஸ்வரி வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அரசிற்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் எதிராக கருத்துகளைப் பதிவு செய்து வந்துள்ளார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியும், பொது இடங்களிலும் அரசிற்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளார். இதனையடுத்து மார்ச் 6ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
மேலும், அவர் முறையான அனுமதி பெறாமல் செங்கல்பட்டு மாவட்டத்தை விட்டு வெளியூர்களுக்குச் செல்லக் கூடாது எனவும், பணியிடை நீக்கம் காலத்தில் இருக்கும்போது அவருக்கு எந்தவிதமான பயணப்படியும் கொடுக்கக் கூடாது" எனவும் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு, மக்கள் கல்வி கூட்டியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதிமுக பம்பரம் சின்னம் தொடர்பான வழக்கு; தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!