ETV Bharat / state

நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த அரசு மருத்துவரின் கணவர்.. மனைவி இல்லாத நேரத்தில் மருத்துவம் பார்த்த அவலம்! தென்காசியில் அதிரடி கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 9:39 PM IST

Tenkasi news: பாவூர்சத்திரம் அருகே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த அரசு மருத்துவரின் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரசு மருத்துவரின் கணவர் போலீசாரால் கைது
அரசு மருத்துவரின் கணவர் போலீசாரால் கைது

அரசு மருத்துவரின் கணவர் போலீசாரால் கைது

தென்காசி: பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவா (வயது 35). பெண் மருத்துவரான இவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஜெயராமன் (வயது 38) டிப்ளமோ பார்மசி முடித்து உள்ளார். இவர்களது கிளினிக் தென்காசி - ஆலங்குளம் நெடுஞ்சாலை சிவகாமிபுரம் விளக்கில் இயங்கி வருகிறது.

மனைவி ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் கணவர் ஜெயராமன் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். டிப்ளமோ பார்மசி படித்து விட்டு மருத்துவம் பார்த்ததில் பல நோயாளிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு, மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்கள் சென்ற நிலையில் புகாரின் பேரில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் இன்று (பிப். 3) திடீர் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்ததும் மருந்துகள் கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் தென்காசி கோட்டாட்சியர் லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: எந்த நேரத்திலும் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தலாம் - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.