சென்னை: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அறிவித்தார். இதன் மூலம் சமீபகாலமாக இறக்குமதி வரி விதிப்பும் தங்கம், வெள்ளி விலை ஏறுவதற்கு காரணமாக இருப்பதாக அத்தொழில் துறையினர் கூறிவந்த நிலையில், தங்கம், வெள்ளி விலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரிகுறைப்பு எதிரொலியால், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ.52,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3.50 காசுகள் குறைந்து ரூ.92.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: பலனளிக்காத போராட்டம்.. அன்று கூலிக்காக இன்று வேலைக்காக: மாஞ்சோலை படுகொலை நினைவு தினம் உணர்த்துவது என்ன? - Manjolai Labourers Massacre day