சென்னை: சார்ஜாவில் இருந்து இன்று காலை கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளையும், பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர்.
பின்னர் விமானத்தின் உட்பகுதியிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகளை பார்த்த அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை பரிசோதித்தனர் அதில் 1399 கிராம் எடையில் தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவை விமானத்தில் கடந்த வாரம் 2 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!