ETV Bharat / state

"புதிய கட்சி தொடக்கம் ஆரவாரமாகத்தான் இருக்கும்".. தவெக குறித்து ஜி.கே.வாசன்! - G K Vasan

புதிய கட்சியின் தொடக்கம் ஆரவாரமாகத் தான் இருக்கும். அதுதான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் நடக்கிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து ஜி.கே.வாசன் பேசியதாவது, "2026-ல் தமிழ் மாநில காங்கிரஸ் குரல் சட்டமன்றத் தேர்தலில் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அதற்காக, தற்போது உறுப்பினர்கள் சேர்க்கையும் செய்து வருகிறோம்.

ஜி.கே.வாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

மது விலக்கு: மது விலக்கு கொள்கையை ஆக்கப்பூர்வமாக அணுக வேண்டும். விசிக மாநாட்டில் இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் அகில இந்திய அளவிலான கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களின் மதுக் கொள்கை என்ன என்பதை அவர்கள் விளக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்கான முழு அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது.

மத்திய அரசு, மது விலக்கு கொள்கையை நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசு கூறுவது நாங்கள் மதுக்கடைகளை மூட மாட்டோம் என உறுதி எடுத்ததாகவே தெரிகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள அகில இந்திய கட்சி தலைவர்கள், அவர்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் மது விலக்கு கொள்கையை முன்னெடுக்கட்டும். மதுக் கொள்கை மூலம் மக்களை ஏமாற்றுபவர்களை வாக்குச்சீட்டு மூலம் மக்கள் ஏமாற்றுவார்கள்.

தமிழக மீனவர்கள் பிரச்னை: 160க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். மேலும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளையும் முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசோடு கண்டிப்போடு பேசி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும்.

நாளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்குச் செல்கிறார். அவர் புதிய அதிபரிடம் பேசி இந்த விவகாரம் குறித்து பேசி மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என நம்புகிறேன். தமிழக அரசின் தவறான கல்விக் கொள்கையால் தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடைபெற்ற தவெக மாநாடு பூமி பூஜை!

தமிழகத்திற்கு ஒரு சட்டமா?: தமிழக அரசு தன் சொந்த நிதியிலிருந்து ஊதியத்தை வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற தமிழக அரசின் பிடிவாதத்தால் தான் இந்த நிலை. அவர்கள் தங்களின் பிடிவாதத்தை கைவிட வேண்டும். நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றில் உள்ள நன்மைகள் குறித்து தமிழக அரசுக்கு தெரியவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் ஒரு சட்டம், தமிழகத்திற்கு ஒரு சட்டமா? என கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சியின் நிலை: திமுக அரசு மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றும் அரசாக உள்ளது. இந்த அரசில் பேச்சு மட்டும் தான் உள்ளது. செயல்பாடு குறைவாகவே உள்ளது. அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும், ஆட்சியாளர்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருக்காது என மக்கள் எண்ணும் அளவிற்கு தான் இந்த ஆட்சியின் நிலை உள்ளது.

ரஜினிகாந்த் நலம்பெற வேண்டும்: உடல்நிலை சரியில்லாத ரஜினி நலம் பெற வேண்டும் என்று அறிக்கை விடுத்தேன். அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவர் வீடு திரும்பி, நன்கு ஓய்வெடுத்த பின் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க இருக்கிறேன். (தற்போது ரஜினிகாந்த் வீடு திரும்பிவிட்டார்)

தவெக: தமிழகத்தில் புதிய கட்சி பலர் தொடங்கி இருக்கிறார்கள். கட்சியின் தொடக்கம் ஆரவார தொடக்கமாக தான் இருக்கும். அது தான் தவெகவில் நடக்கிறது. இதைத் தாண்டி வேறு எதுவும் இதில் கருத்து கூற விரும்பவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதை கேமராவில் ரீவைண்ட் செய்து பார்த்தால் கூட தெரிந்து விடும். அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவமனை எப்பொழுது திறக்கப்படும் என்பது குறித்து தற்பொழுது கூற முடியாது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அதை சிறப்பான முறையில் திறந்து வைப்பார்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.