சென்னை: கிருஷ்ணரின் பெருமைகளைப் பரப்பவும், பொதுமக்களுக்குக் கிருஷ்ணர் அருள் அளிக்கும் வகையில் இஸ்கான் வட சென்னையின் 10வது வருடாந்திர கவுர நிதாய ரத யாத்திரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே கிருஷ்ணா ஹரே ராமா என்ற கோஷத்தை எழுப்பியபடி ரதத்தை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த ரதம் பெரம்பூரிலிருந்து அகரம் வரையில் நடைபெற்றது.
இது குறித்து இஸ்கான் வடசென்னை பொது மேலாளர் ஜெயகோபிநாததாஸ் கூறும்போது, "அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் இஸ்கான் (ISKCON) வடசென்னை 10வது வருடாந்திர ஸ்ரீ ஸ்ரீ கவுர நித்தாய் யாத்திரை கொண்டாடுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் கிருஷ்ணரின் பெருமைகளைப் பரப்ப விரும்பிய இஸ்கான் நிறுவனம் ஸ்ரீல பிரப்பாதருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த யாத்திரை உலக அமைதிக்காகவும், ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஸ்ரீ கவுர நித்தாய் ரத யாத்திரைக்கு வடசென்னையில் தனித்துவமாக நடத்தப்படுகிறது. பக்தர்கள் பொதுவாக ஜகன்நாதர் யாத்திரை கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்கான் வடக்கு சென்னையில் கவுர நித்தாய் விகிரஹங்கள் உள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பலராமர் இந்தக் கலியுகத்தில் அவர்கள் பக்தர்களாகத் தோன்றி சங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பினார்கள். இந்த யாத்திரையின் மூலம் பகவானின் புகழைப் பரப்புவதுடன், பக்தர்களுக்கும் நேரில் வந்து காட்சி அளிக்கிறார்" என தெரிவித்தார்.
பாரதி சாலையிலிருந்து புறப்பட்ட ரதம் பெரம்பூர் நெடுஞ்சாலை பேப்பர் மில்ஸ் ரோடு அடி சாலை ஜவஹர் நகர் பிரதான சாலை வழியாகச் சென்று இறுதியாக துறையூர் நாடார் கல்யாண மண்டபம் வரை மாலை சென்றடைடுத்து. இந்த ஊர்வலம் வீதி முழுவதும் ரங்கோலி போட்டு இறைவனைத் தரிசித்த வண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான பத்தர்கள் ரதத்தை இழுத்தனர். சில பக்தர்கள் பாடியும் நடனமாடியும் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழக வானிலை நிலவரம் : தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TAMIL NADU WEATHER REPORT