ETV Bharat / state

திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்கும் காலம் விரைவில் வரும்: துணை வேந்தர் பஞ்சநதம் உறுதி! - THANJAVUR TAMIL UNIVERSITY

திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்க யுனெஸ்கோ அமைப்போடு சேர்ந்து தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்கும் காலம் வரும் என்றும் காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பஞ்சநதம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பஞ்சநதம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 6:10 PM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14 ஆவது பட்டமளிப்பு விழா தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில், திண்டுக்கல், காந்தி கிராம்-கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த பட்டமளிப்பு விழாவில், மொத்தம் 656 பேர் முனைவர் பட்டம், முதுகலை பட்டம், இளங்கல்வியியல் பட்டங்களையும்; 8 பேர் தங்கப் பதக்கங்களையும் பெற்றனர். பட்டமளிப்பு விழாவின் தொடர்ச்சியாக, காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பஞ்சநதம் மாணவர்கள் மற்றும் விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆயிரம் போஸ்ட் அனுப்பிய திராவிடர் விடுதலைக் கழகம்!

அப்போது பேசிய அவர், "செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் உலகம் மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து அதனை உலக மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றது. மத்திய அரசால் அதிகாரப்பூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும், அங்கீகாரம் பெறாத 66 இந்திய மொழிகளிலும், 58 பழங்குடிகள் மொழிகளிலும், 43 உலக மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து தரமான நூல்களாக தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இதன் உச்சகட்டமாக, திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்க யுனெஸ்கோ அமைப்போடு சேர்ந்து தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்கும் காலம் வரும்" எனக் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.