ETV Bharat / state

காருக்குள் ரகசிய அறை அமைத்து 136 கிலோ கஞ்சா கடத்தல்.. தஞ்சையில் நான்கு பேர் கைது..!

தஞ்சையில் கார்களில் ரகசிய அறை அமைத்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்திய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தஞ்சையில் கஞ்சா கடத்தியவர்கள் கைது
தஞ்சையில் கஞ்சா கடத்தியவர்கள் கைது (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 1:14 PM IST

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் கூடலூர் சாலையில் சிலர் காரில் பதுக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரா, தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையிலான கிழக்கு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இரண்டு கார்கள் நின்றுள்ளன. போலீசார் இரண்டு கார்களில் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனையிட்டனர். அப்போது காரில் 65 பொட்டலங்களில் 136 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள கம்மாகரையை சேர்ந்த ரவிச்சந்திரன் (44), மதுரை கூடல் நகரை சேர்ந்த சுப்ரமணி (45), புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியை சேர்ந்த டேவிட் பெர்னாண்டோ (30), சேமங்கொட்டை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க: திருமண நாளில் பறிபோன பெண்ணின் உயிர்... பரிதவிக்கும் மூன்று பிள்ளைகள்..! தஞ்சையில் சோகம்..!

இவர்கள் 4 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து வருவதும், தஞ்சைக்கு அவர்கள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

மேலும், கைதானவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கார்களும் தமிழ்நாடு மாநில ஒரே பதிவு எண் கொண்டிருந்தது. அந்த கார்களில் பின் சீட்டில் அடியில் கஞ்சா கடத்துவதற்காக தனியாக ஒரு ரகசிய அறைகள் அமைத்து அதில் கஞ்சாவை மறைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரண்டு கார்களையும், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், காரில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை கைது செய்த போலீசாரை தஞ்சை நகர டிஎஸ்பி சோமசுந்தரம் பாராட்டினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.