ஈரோடு: சத்தியமங்கலத்தில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி தலைமையில் அதிமுக ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகையில், "அண்மையில் ஊராட்சி தலைவர்களில் 80 சதவீதம் பேர் நாம் தான் இருக்கிறோம். இதை நழுவ விடக்கூடாது. இது இருந்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் பாதுகாப்பு அரணாக இருக்கும். அப்போது நாம் ஆட்சியில் இருந்தோம். திமுகவினர் களத்தில் நிற்க பயப்பட்டனர். இன்றைய நிலை வேறு. நாம் களத்தில் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்.
ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் படி சரிபார்த்து அவர்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும். தற்போது 4 நான்கு முனை போட்டி உள்ளது. ஐந்து முனை போட்டி வர வாய்ப்புள்ளது. கொடி சின்னம் விரைவில் அறிவிக்க உள்ளனர். அவர்கள் தொண்டர்களை சுயேட்சையாக கூட நிற்க அறிவுறுத்தலாம். இதனை மனதில் வைத்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 10 வாக்குகள் கூட சிதறாமல் இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதையும் அவரது கட்சி கொடி, சின்னம் விரைவில் அறிவிக்க உள்ளதை சுட்டிக்காட்டி 5 முனை போட்டி வருவதை குறிப்பிட்ட அவர், மாவட்ட பொறுப்பாளர்களை அழைத்து வரும் ஊராட்சி தேர்தலுக்கு தயாராக இருக்க திமுக தலைமை ஆலோசனை வழங்கியதையும் சூசகமாக கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை..” - எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா பதிலடி! - DMK MP A Raja